"சட்டத்தை கையில் எடுக்க மாட்டேன்"- 5 பேரை கொன்றுள்ளதாக பேசிய முன்னாள் பாஜக எம்.எல்.ஏ விளக்கம்


சட்டத்தை கையில் எடுக்க மாட்டேன்- 5 பேரை கொன்றுள்ளதாக பேசிய முன்னாள் பாஜக எம்.எல்.ஏ விளக்கம்
x

முன்னாள் பாஜக எம்.எல்.ஏ கியான் தேவ் தான் 5 பேரை கொன்றுள்ளதாக பேசியது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.

ஜெய்ப்பூர்,

ராஜஸ்தானில் பாஜக முன்னாள் எம்.எல்.ஏ கியான் தேவ், பசுவதையில் ஈடுபடும் நபர்கள் யாராக இருந்தாலும் அவர்களை கொலை செய்யுங்கள், நாங்கள் இதுவரை 5 பேரை கொன்றுள்ளதாக பேசி இருந்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.

வன்முறையை தூண்டும் வகையில் அவர் பேசியுள்ள வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதையடுத்து, அவர் மீது ராஜஸ்தான் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். பாஜக முன்னாள் எம்.எல்.ஏவின் பேச்சு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனத்தை தெரிவித்து இருந்தது.

இந்த நிலையில் கியான் தேவ் தான் 5 பேரை கொன்றுள்ளதாக பேசியது குறித்து விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக இன்று அவர் கூறுகையில், 'இஸ்லாமியர்களை ராஜஸ்தான் முதல் மந்திரிஅசோக் கெலாட் பாதுகாக்கிறார். பசுக் கடத்தல் செய்பவர்களைக் கண்டுபிடிக்க வேண்டும் என நான் எனது தொண்டர்களிடம் கூறியுள்ளேன். ஒருவேளை அவர்கள் தப்பிக்க முயன்றால் அவர்களை அடித்து போலீசாரிடம் ஒப்படைக்க வேண்டும். சட்டத்தை என் கையில் எடுக்க மாட்டேன்" என தெரிவித்துள்ளார்.


Next Story