லாரியுடன் கடத்தப்பட்ட ரூ.58 லட்சம் மதிப்பிலான கைக்கெடிகாரம் பறிமுதல்; 2 பேர் கைது


லாரியுடன் கடத்தப்பட்ட ரூ.58 லட்சம் மதிப்பிலான கைக்கெடிகாரம் பறிமுதல்; 2 பேர் கைது
x
தினத்தந்தி 25 Jan 2023 12:15 AM IST (Updated: 25 Jan 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

லாரியுடன் கடத்தப்பட்ட ரூ.58 லட்சம் மதிப்பிலான கைக்கெடிகாரம் பறிமுதல். 2 பேர் பிடிபட்டனர்.

ராஜராஜேஸ்வரி நகர்:

பெங்களூரு ராஜராஜேஸ்வரி நகர் போலீசார் தங்கள் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கடந்த 15-ந் தேதி வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த லாரியை தடுத்து நிறுத்தி சோதனை நடத்தினர். அப்போது அந்த லாரியில் பிரபல நிறுவனங்களின் கைக்ெகடிகாரங்கள் இருந்தன. அந்த கைக்கெடிகாரங்களுக்கான ஆவணங்கள் எதுவும் லாரியில் இருந்தவர்களிடம் இல்லை. இதையடுத்து போலீசார் 2 பேரிடமும் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் ஜமீர் அகமது மற்றும் ஷபீர் என்பதும், அவர்கள் பெங்களூருவில் உள்ள கடைகளுக்கு விற்பனைக்காக எடுத்து வரப்பட்ட பிரபல நிறுவனங்களில் கைக்கெடிகாரங்களை லாரியுடம் கடத்தியது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.58 லட்சம் மதிப்பிலான 1,282 கைக்கெடிகாரங்கள் மற்றும் லாரி பறிமுதல் செய்யப்பட்டது. கைதான 2 பேரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story