தலித் வீட்டில் புகைப்படத்திற்கு 'போஸ்' கொடுத்த பசவராஜ் பொம்மை, எடியூரப்பா-காங்கிரஸ் விமர்சனம்


தலித் வீட்டில் புகைப்படத்திற்கு போஸ் கொடுத்த பசவராஜ் பொம்மை, எடியூரப்பா-காங்கிரஸ் விமர்சனம்
x
தினத்தந்தி 13 Oct 2022 12:15 AM IST (Updated: 13 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

தலித் வீட்டில் புகைப்படத்திற்கு ‘போஸ்' கொடுத்த பசவராஜ் பொம்மை, எடியூரப்பாவை காங்கிரஸ் விமர்சித்துள்ளது.

பெங்களூரு: கர்நாடக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

கர்நாடக சட்டசபை தேர்தல் நெருங்குகிறது. அதனால் பா.ஜனதா தலைவர்களான முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, எடியூரப்பா ஆகியோர் தலித் சமூக மக்களை நினைக்க தொடங்கியுள்ளனர். பிற்படுத்தப்பட்ட மக்களின் நலன் குறித்தும் அவர்கள் பேசுகிறார்கள். ஆனால் இதுவரை அவர்களின் நலனுக்காக எதையும் செய்யவில்லை. தேர்தலில் ஓட்டுகளை பெற வேண்டும் என்பதற்காக அவர்கள் தலித், பிற்படுத்தப்பட்ட மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு செல்கிறார்கள்.

கர்நாடகத்தில் பா.ஜனதா ஆட்சியில் தலித் மக்கள் மீதான அத்துமீறல் சம்பவங்கள் அதிகளவில் நடக்கிறது. சமீபத்தில் சிக்கமகளூருவில் அந்த சமூகத்தை சேர்ந்த 16 பேர் அடைத்து வைக்கப்பட்டு தாக்கப்பட்டனர். கடந்த 2021-ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் நடப்பு ஆண்டில் தலித்துகள் மீதான தாக்குதல் சம்பவங்கள் 54 சதவீதம் அதிகரித்துள்ளது. தலித் வீட்டிற்கு சென்று பசவராஜ் பொம்மை, எடியூரப்பா ஆகியோர் புகைப்படத்திற்கு 'போஸ்' கொடுத்துவிட்டு வருகிறார்கள்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.


Next Story