எடியூரப்பா நாளை டெல்லி பயணம்


எடியூரப்பா நாளை டெல்லி பயணம்
x

பா.ஜனதா மத்திய தேர்தல் கூட்டத்தில் கலந்து கொள்ள எடியூரப்பா நாளை டெல்லி செல்கிறார்

பெங்களூரு:-

பா.ஜனதா கட்சியின் மத்திய தேர்தல் குழு கூட்டம் டெல்லியில் நாளை (வெள்ளிக்கிழமை) டெல்லியில் நடக்கிறது. இதில் கலந்து கொள்வதற்காக முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா நாளை டெல்லிக்கு பயணம் மேற்கொள்கிறார். இதற்காக அவர் நாளை காலை 9.45 மணிக்கு பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் இருந்து விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு செல்லும் அவர், பகல் 12.35 மணிக்கு அங்கு சென்றடைகிறார். அங்கு பா.ஜனதாவின் மத்திய தேர்தல் குழு கூட்டத்தில் கலந்து கொண்ட பிறகு அவர் இரவு 7.55 மணிக்கு டெல்லியில் இருந்து விமானம் மூலம் பெங்களூரு வருகிறார். எடியூரப்பா மத்திய தேர்தல் குழு உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது. அதில் கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி வேட்பாளர்கள் தேர்வு குறித்து முக்கிய ஆலோசனை நடைபெறும் என்று கூறப்படுகிறது.


Next Story