வருகிற 21-ந் தேதி பிருந்தாவன் பூங்காவில் யோகா தினம்


வருகிற 21-ந் தேதி பிருந்தாவன் பூங்காவில் யோகா தினம்
x

வருகிற 21-ந் தேதி பிருந்தாவன் பூங்காவில் யோகா தினம் கடைப்பிடிக்கப்படும் என்று மண்டியா மாவட்ட கலெக்டர் கோபாலகிருஷ்ணா தெரிவித்தார்.

மண்டியா:-

ஆலோசனை கூட்டம்

மண்டியா மாவட்ட நிர்வாகம், மாவட்ட பஞ்சாயத்து, ஆயுஸ்மான் துறை, இளைஞர் நலன், விளையாட்டு துறை, நேருயுவ கேந்திரா உள்ளிட்டவை சார்பில் வருகிற 21-ந் தேதி காலை 7 மணி முதல் 8 மணி வரை ஸ்ரீரங்கப்பட்டணா தாலுகாவில் உள்ள கே.ஆர்.எஸ்.(கிருஷ்ணராஜசாகர்) அணை முன்பு அமைந்திருக்கும் பிருந்தாவன் பூங்காவில் உலக யோகா தினம் கடைபிடிக்கப்பட உள்ளது. இதுதொடர்பான ஆலோசனை கூட்டம் நேற்று மாவட்ட கலெக்டர் கோபாலகிருஷ்ணா தலைமையில் அவரது அலுவலகத்தில் நடந்தது.

அவர் யோகா தினம் கடைபிடிக்கப்படுவதையொட்டி போஸ்டரை வெளியிட்டு ஆலோசனை கூட்டத்தில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

20 வகையான யோகாசனம்

யோகா தினத்தை அர்த்தப்பூர்வமாக கொண்டாட வேண்டும். பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் கலந்து கொள்ள வேண்டும். யோகா பயிற்சியால் உடல்நிலை சீராக இருக்கும். யோகா தின விழா கே.ஆர்.எஸ். அணையில் நடைபெற உள்ளது. இதில் மாவட்ட பொறுப்பு மந்திரி செலுவராயசாமி, ஆதிசுஞ்சனகிரி மடாதிபதி நிர்மலானந்தநாதசாமி, சந்தனவத மடத்தின் மடாதிபதி நேத்ரா மகாந்தா சிவயோகி ஆகியோர் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.

யோகாசன விழாவில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்று 45 நிமிடம் யோகா பயிற்சி மேற்கொள்ள உள்ளனர். 20 வகையான யோகாசனங்கள் செய்யப்பட உள்ளன. இதற்கு தேவையான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story