உறவை முறித்ததால் முன்னாள் காதலியை கழுத்தறுத்து கொன்ற காதலன் - கொடூர சம்பவம்
உடலில் 18 இடங்களில் வெட்டுக்காயங்களுடன் வீட்டில் இளம் பெண் ரத்த வெள்ளத்தில் பிணமாக மீட்கப்பட்டார்.
திருவனந்தபுரம்,
கேரள மாநிலம் கன்னூர் மாவட்டம் வாழ்யாயில் பகுதியை சேர்ந்த இளம்பெண் விஷ்ணுபிரியா (வயது 21). இவர் அப்பகுதியில் உள்ள மருந்துக்கடையில் மருந்தாளராக வேலை செய்து வருகிறார். விஷ்ணு பிரியாவும் மனந்தரி பகுதியை சேர்ந்த ஷம்ஜித் (வயது 25) என்ற இளைஞரும் காதலித்து வந்துள்ளனர்.
இதனிடையே, கடந்த சில நாட்களுக்கு முன் ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக ஷம்ஜித் உடனான காதலை விஷ்ணுபிரியா முறித்துக்கொண்டுள்ளார். இதனால், விஷ்ணுபிரியா மீது ஷம்ஜித் மிகுந்த கோபத்தில் இருந்துள்ளார்.
இந்நிலையில், உறவினர் உயிரிழந்த நிலையில் குடும்பத்தினர் அனைவரும் நேற்று வெளியூர் செல்ல விஷ்ணு பிரியா மட்டும் வேலைக்கு செல்லாமல் வீட்டில் தனியாக இருந்துள்ளார். இதையறிந்த ஷம்ஜித், பிரியாவின் வீட்டிற்கு வந்துள்ளார்.
அங்கு வீட்டில் தனியாக இருந்த பிரியாவிடம் தன்னுடனான காதலை முறித்துக்கொண்டது குறித்து ஷம்ஜித் மீண்டும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளான். வாக்குவாதம் முற்றிய நிலையில் தான் மறைத்து கொண்டுவந்த கத்தியை கொண்டு பிரியாவின் கழுத்தை அறுத்து ஷம்ஜித் கொடூரமாக கொலை செய்துள்ளான். ஆத்திரம் தீராமல் பிரியாவின் கழுத்து, கை என உடலின் பல்வேறு இடங்களில் கத்தியால் கொடூரமாக தாக்கியுள்ளான். இதில், அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்து உயிரிழந்தார். விஷ்ணு பிரியாவின் உடலில் மொத்தம் 18 இடங்களில் வெட்டுக்காயம் ஏற்பட்டுள்ளது.
பிரியாவை கொடூரமாக கொலை செய்த ஷம்ஜித் அங்கிருந்து தப்பியோடியுள்ளான். வெளியூர் சென்ற பிரியாவின் தாயார் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது, வீட்டில் தனது மக்கள் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இந்த கொடூர கொலை சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிரியாவின் உடலை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், பிரியாவின் முன்னாள் காதல் ஷம்ஜித்தை கைது செய்தனர். பிரியாவை கொலை செய்ததை ஷம்ஜித் ஒப்புக்கொண்டான். இதனை தொடர்ந்து ஷம்ஜித் சிறையில் அடைக்கப்பட்டான்.