நடுரோட்டில் தேங்கியிருந்த தண்ணீரில் குளித்து, துணி துவைத்து நூதன போராட்டம்


நடுரோட்டில் தேங்கியிருந்த தண்ணீரில் குளித்து, துணி துவைத்து நூதன போராட்டம்
x

இளைஞர் ஒருவர் நடுரோட்டில் தேங்கியிருந்த தண்ணீரில் குளித்து, துணி துவைத்து நூதன போராட்டம் நடத்தினார்.

பாலக்காடு

கேரளா மாநிலம் பாண்டிக்காட்டில் இருந்து பாலக்காடு செல்லும் சாலைகளில் எங்குப் பார்த்தாலும் குண்டும் குழியுமாக உள்ளது. மூன்று மாதங்களுக்கு முன் அனைத்து ரோடுகளும் போடப்பட்டது. தொடர் மழையால் சாலையில் மீண்டும் பள்ளங்கள் உருவாகியுள்ளது. இதனால் இங்கு ஏராளமான விபத்துகளும், உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன. இதை அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டு செல்ல இளைஞர் ஒருவர் நூதன போராட்டம்ந் அடத்தி உள்ளார்.

அவ்வழியாக வந்த எம்.எல்.ஏ யு.ஏ.லத்தீப் முன் இளைஞர் சாயில் உள்ள பள்ளத்தின் நின்று தவம் செய்வது போல் நின்றார். சாலையில் உள்ள பள்ளத்தில் தேங்கியிருந்த தண்ணீரில் குளித்தும், துணி துவைத்தும் காட்டினார்.

இந்த காட்சிகள் தற்போது இணையத்தில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது.


Next Story