மாநில செய்திகள்

பசவேஸ்வரா கோவில் காட்டுப்பகுதியில் வியாபாரியை தந்தத்தால் குத்தி காட்டுயானை கொன்றது வனத்துறையினர் விசாரணை + "||" + Merchant ivory Stabbed and killed by wild elephant

பசவேஸ்வரா கோவில் காட்டுப்பகுதியில் வியாபாரியை தந்தத்தால் குத்தி காட்டுயானை கொன்றது வனத்துறையினர் விசாரணை

பசவேஸ்வரா கோவில் காட்டுப்பகுதியில் வியாபாரியை தந்தத்தால் குத்தி காட்டுயானை கொன்றது வனத்துறையினர் விசாரணை
சாம்ராஜ்நகர் தாலுகா பசவேஸ்வரா கோவில் காட்டுப்பகுதியில் வியாபாரி ஒருவரை தந்தத்தால் குத்தி தூக்கி வீசி காலால் மிதித்து காட்டுயானை கொன்றுள்ளது. இதுகுறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். வியாபாரி சாம்ராஜ்நகர் தாலுகாவில் உள்ள மலைப்பகுதியில் ப

கொள்ளேகால்,

சாம்ராஜ்நகர் தாலுகா பசவேஸ்வரா கோவில் காட்டுப்பகுதியில் வியாபாரி ஒருவரை தந்தத்தால் குத்தி தூக்கி வீசி காலால் மிதித்து காட்டுயானை கொன்றுள்ளது. இதுகுறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

வியாபாரி

சாம்ராஜ்நகர் தாலுகாவில் உள்ள மலைப்பகுதியில் பசவேஸ்வரா கோவில் அமைந்துள்ளது. அந்தக் கோவிலின் அருகே உள்ள பகுதியில் வசித்து வருபவர் மகாதேவ நாயக்கா. இவர் கோவிலின் முன்பு சிறிய கடை வைத்து பூஜை பொருட்களை விற்பனை செய்து வந்தார். இந்த நிலையில், நேற்று முன்தினம் மாலையில் வழக்கம்போல் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தார்.

பின்னர் இயற்கை உபாதையை கழிப்பதற்காக கோவிலின் பின்புறம் உள்ள காட்டுப்பகுதிக்கு சென்றார். அப்போது அங்கு ஒரு காட்டுயானை வந்தது. அதைப்பார்த்த மகாதேவ நாயக்கா ஓட்டம் பிடித்தார்.

தந்தத்தால் குத்தி தூக்கி வீசியது

ஆனால் அந்த காட்டுயானை மகாதேவ நாயக்காவை விரட்டிச்சென்று தந்தத்தால் குத்தி தூக்கி வீசியது. பின்னர் கீழே விழுந்த அவரை காலால் மிதித்தது. இதில் படுகாயம் அடைந்த மகாதேவ நாயக்கா சம்பவ இடத்திலேயே இறந்தார். இதையடுத்து அந்த காட்டுயானை அங்கிருந்து வனப்பகுதிக்குள் சென்றுவிட்டது.

இதற்கிடையே காட்டுப்பகுதிக்குள் சென்ற மகாதேவ நாயக்கா நீண்ட நேரம் ஆகியும் திரும்பி வராததால், அக்கம்பக்கத்து கடைக்காரர்களும், மகாதேவ நாயக்காவின் குடும்பத்தினரும் அவரைத் தேடி காட்டுக்குள் சென்றனர்.

வனத்துறையினர் உறுதி

அப்போது அங்கு மகாதேவ நாயக்கா இறந்து கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் இதுகுறித்து அவர்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். அப்போது மகாதேவ நாயக்காவை காட்டுயானை தந்தத்தால் குத்தி தூக்கி வீசி காலால் மிதித்து கொன்றிருப்பதை அவர்கள் உறுதி செய்தனர்.

இதையடுத்து அவருடைய உடலை பிரேத பரிசோதனைக்காக மாவட்ட அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் இறந்துபோன மகாதேவ நாயக்காவின் குடும்பத்தினருக்கு அரசிடம் இருந்து நிவாரணை நிதி பெற்றுத்தருவதாகவும் அவர்கள் உறுதி அளித்துள்ளனர்.

விவசாயிகளுக்கு நஷ்டம்

இதற்கிடையே சாம்ராஜ்நகர் மாவட்டம் குண்டலுபேட்டை தாலுகா பந்திப்பூர் வனப்பகுதியில் இருந்து ஒரு காட்டுயானை வெளியேறி உள்ளது. அந்த யானை வனப்பகுதியை ஒட்டியுள்ள சவுடள்ளி கிராமத்திற்குள் புகுந்தது. பின்னர் அக்கிராமத்தைச் சேர்ந்த நாகராஜ் என்பவரின் காய்கறி தோட்டத்தில் புகுந்து, அங்கிருந்த செடிகளை பிடுங்கி தின்றும், காலால் மிதித்தும் நாசம் செய்தது.

அதையடுத்து தோட்டத்தில் இருந்து வெளியேறிய அந்த காட்டுயானை முக்தி காலனி கிராமத்திற்கு சென்றது. அங்கு செல்வராஜ் என்பவருடைய தக்காளி தோட்டத்திற்குள் புகுந்த அந்த காட்டுயானை, அங்கிருந்த தக்காளி செடிகளையும் நாசம் செய்தது. இதனால் விவசாயிகள் நாகராஜும், செல்வராஜும் பெரும் நஷ்டம் அடைந்தனர்.

கிராம மக்கள் பீதி

இதுகுறித்து அவர்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த வனத்துறையினர் விரைந்து வந்து சம்பவ இடங்களை பார்வையிட்டனர். மேலும் காட்டுயானைகள் வனப்பகுதியை விட்டு வெளியேறாமல் தடுக்க நடவடிக்கை எடுப்பதாக அவர்கள் உறுதி அளித்தனர். அதுமட்டுமல்லாமல் பாதிக்கப்பட்ட விவசாயிகள் 2 பேருக்கும் அரசிடம் இருந்து நிவாரண நிதி பெற்றுத்தருவதாகவும் கூறினர்.

காட்டுயானைகளின் அட்டகாசத்தால் சவுடள்ளி, முக்தி காலனி கிராம மக்கள் பீதியில் உள்ளனர்.