மாநில செய்திகள்

நீதிபதிகள் தீர்ப்பு வழங்கும் முன் யோசிக்க வேண்டும் இல்லாத காவிரி நீரை எங்கிருந்து திறந்துவிடுவது? முன்னாள் பிரதமர் தேவேகவுடா கேள்வி + "||" + Cauvery absence Where water is going to open up

நீதிபதிகள் தீர்ப்பு வழங்கும் முன் யோசிக்க வேண்டும் இல்லாத காவிரி நீரை எங்கிருந்து திறந்துவிடுவது? முன்னாள் பிரதமர் தேவேகவுடா கேள்வி

நீதிபதிகள் தீர்ப்பு வழங்கும் முன் யோசிக்க வேண்டும் இல்லாத காவிரி நீரை எங்கிருந்து திறந்துவிடுவது? முன்னாள் பிரதமர் தேவேகவுடா கேள்வி
“நீதிபதிகள் தீர்ப்பு வழங்கும் முன் யோசிக்க வேண்டும். இல்லாத காவிரி நீரை எங்கிருந்து திறந்துவிடுவது?“ என்று முன்னாள் பிரதமர் தேவேகவுடா கேள்வி எழுப்பியுள்ளார். போக்குவரத்து நெரிசல் பெங்களூருவில் நேற்று ‘பி–பேக்‘ அமைப்பு சார்பில் ஒரு நிகழ்ச்சி நடைபெற்றது.

பெங்களூரு,

“நீதிபதிகள் தீர்ப்பு வழங்கும் முன் யோசிக்க வேண்டும். இல்லாத காவிரி நீரை எங்கிருந்து திறந்துவிடுவது?“ என்று முன்னாள் பிரதமர் தேவேகவுடா கேள்வி எழுப்பியுள்ளார்.

போக்குவரத்து நெரிசல்

பெங்களூருவில் நேற்று ‘பி–பேக்‘ அமைப்பு சார்பில் ஒரு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முன்னாள் பிரதமர் தேவேகவுடா கலந்து கொண்டு பேசியதாவது:–

“அரசியல்வாதிகளின் நடவடிக்கைகளை மக்கள் உன்னிப்பாக கவனிக்கிறார்கள். அதனால் அரசியல்வாதிகள் தங்களின் நடவடிக்கையை மாற்றிக்கொள்ள வேண்டியது அவசியம். பெங்களூருவில் மக்கள்தொகை பெருக்கம் மற்றும் போக்குவரத்து நெரிசல் என்பது பெரிய பிரச்சினையாக உள்ளது. இந்த பிரச்சனையை தீர்க்க அனைவரும் இணைந்து முயற்சி செய்ய வேண்டும்.

அரசியல் தூய்மையாக...

பூங்கா நகரம் என்ற பெருமையை பெற்று இருந்த பெங்களூரு தற்போது மாறிவிட்டது. இங்குள்ள மக்கள்தொகை 1 கோடிக்கு மேல் சென்றுவிட்டது. நகரில் பிரச்சினைகள் அதிகரித்துவிட்டன. குடிநீர், போக்குவரத்து மற்றும் வீட்டு வசதி பிரச்சினைகள் அதிகரித்து வருகின்றன. இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண அரசியல்வாதிகள் மற்றும் நகர குடிமக்கள் சங்கங்கள் இணைந்து செயல்பட வேண்டும்.

மாநிலத்தில் அதிகார துஷ்பிரயோகம் நடக்கிறது. பிரச்சினைகளை தீர்க்க வேண்டுமென்றால் அரசியல் தூய்மையாக இருக்க வேண்டும். இது மிக கடினமான பணி. நான் ஏமாற்றம் அடையவில்லை. அதனால் தான் இந்த வயதிலும் அரசியலில் ஈடுபட்டு வருகிறேன். எனது அனுபவத்தை அடுத்த தலைமுறைக்கு தெரிவிக்க வேண்டும், அதை மக்களிடம் பதிவு செய்ய வேண்டும் என்பதால் நான் இன்னும் அரசியலில் நீடிக்கிறேன்.

மக்களுக்கு பதில் சொல்வது...

நான் 55 ஆண்டுகளாக அரசியலில் உள்ளேன். தற்போது நிலைமை மிக மோசமான சூழ்நிலையில் உள்ளது. குடிநீர் என்பது அடிப்படை உரிமை ஆகும். ஆனால் காவிரி பிரச்சினையில் சுப்ரீம் கோர்ட்டு தமிழகத்திற்கு தண்ணீரை திறந்துவிடும்படி அடிக்கடி உத்தரவிடுகிறது. இல்லாத காவிரி நீரை எங்கிருந்து திறந்து விடுவது? இதில் மக்களுக்கு பதில் சொல்வது நம்மை போன்றவர்களுக்கு பெரும் பிரச்சினையாக உள்ளது.

நீதிபதிகள் தீர்ப்பு வழங்கும்போது ஆழ்ந்து யோசிக்க வேண்டும். உண்மை நிலையை அறிந்து தீர்ப்பு வழங்க வேண்டும். பிரதமர் மோடி உயர் மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டுகளை ரத்து செய்தபோது, அதை நான் வரவேற்றேன். விவசாயிகள் சந்திக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணுமாறு கூறினேன். ஆனால் அதன் பிறகு வங்கிகளில் பணத்தை எடுப்பது தொடர்பாக 65 முறை விதிமுறைகளை ரிசர்வ் வங்கி மாற்றி உத்தரவிட்டது. இதனால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இன்னும் தேவையான அளவுக்கு பணத்தை எடுக்க முடியாத நிலை உள்ளது. ரூபாய் நோட்டுகளை ரத்து செய்வதற்கு முன் அதனால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் தேவையான முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து இருக்க வேண்டும். அதை மத்திய அரசு செய்யவில்லை.“

இவ்வாறு தேவேகவுடா பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் லோக் அயுக்தா முன்னாள் நீதிபதி சந்தோஷ் ஹெக்டே உள்பட பலர் கலந்து கொண்டனர்.