மாநில செய்திகள்

ஓடும் காரில் இளம்பெண் கற்பழிப்பு 3 மர்மநபர்களை பிடிக்க 6 தனிப்படை அமைப்பு + "||" + Rape of a young girl in a moving car

ஓடும் காரில் இளம்பெண் கற்பழிப்பு 3 மர்மநபர்களை பிடிக்க 6 தனிப்படை அமைப்பு

ஓடும் காரில் இளம்பெண் கற்பழிப்பு 3 மர்மநபர்களை பிடிக்க 6 தனிப்படை அமைப்பு
கோலாரில் இருந்து பெங்களூரு வரை கடத்தி சென்று ஓடும் காரில் இளம்பெண்ணை கற்பழித்த 3 மர்மநபர்களை பிடிக்க 6 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இளம்பெண் கடத்தல் கோலார் தாலுகா வேம்கல் அருகே தொட்டவல்லபி கிராமத்தை சேர்ந்தவர் பவித்ரா (வயது 24, பெயர் மாற்றப்பட்டுள்ளது)

கோலார் தங்கவயல்,

கோலாரில் இருந்து பெங்களூரு வரை கடத்தி சென்று ஓடும் காரில் இளம்பெண்ணை கற்பழித்த 3 மர்மநபர்களை பிடிக்க 6 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

இளம்பெண் கடத்தல்

கோலார் தாலுகா வேம்கல் அருகே தொட்டவல்லபி கிராமத்தை சேர்ந்தவர் பவித்ரா (வயது 24, பெயர் மாற்றப்பட்டுள்ளது). இந்த நிலையில், பவித்ரா கடந்த 8–ந்தேதி தனது வீட்டில் தனியாக இருந்தார். அப்போது அவருடைய வீட்டின் முன்பு ஒரு கார் வந்து நின்றது. அந்த காரில் வந்த நபர், ‘உனது சகோதரன் கிராமத்தின் வெளிபுறத்தில் சாலையோரம் மயங்கி கிடக்கிறான். நீ வந்தால், அவனை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்து விடலாம்‘ என்று பவித்ராவிடம் கூறியுள்ளார்.

இதனை நம்பிய பவித்ரா, அந்த நபருடன் காரில் சென்றுள்ளார். அப்போது கார், கிராமத்தின் வெளிபுறத்தில் வந்தபோது, அந்த காரில் மேலும் 2 பேர் ஏறியுள்ளனர். அப்போது தான், தன்னை அந்த நபர் ஏமாற்றி காரில் கடத்தி செல்வது பவித்ராவுக்கு தெரியவந்தது.

ஓடும் காரில் கற்பழிப்பு

இதனால் அதிர்ச்சி அடைந்த பவித்ரா, தன்னை இறக்கிவிடும்படி அவர்களிடம் கெஞ்சியுள்ளார். ஆனால், மர்மநபர்கள் காரில் வேம்கல்லில் இருந்து பெங்களூரு வரை சென்றுள்ளனர். பெங்களூரு செல்லும் வரை 3 பேரும் ஓடும் காரிலேயே பவித்ராவை மாறி, மாறி கற்பழித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து கார், பெங்களூரு எலகங்கா பகுதிக்கு வந்தபிறகு, அவர்கள் காரை நிறுத்தி பவித்ராவை இறக்கிவிட்டனர். இந்த சம்பவம் பற்றி வெளியில் யாரிடமாவது கூறினால் கொலை செய்துவிடுவதாக கூறி மிரட்டிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர்.

இதனால் செய்வதறியாது திகைத்த பவித்ரா, தனக்கு நடந்த சம்பவம் பற்றி எலகங்கா போலீசில் புகார் கொடுத்தார். எலகங்கா போலீசார் இந்த வழக்கை நேற்று முன்தினம் இரவு வேம்கல் போலீசாருக்கு மாற்றினார்கள். இதுதொடர்பாக வேம்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். முன்னதாக, எலகங்கா போலீசார், பவித்ராவை வேம்கல் போலீசாரிடம் ஒப்படைத்தனர். பவித்ரா, மருத்துவ பரிசோதனைக்காக கோலார் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

6 தனிப்படை அமைப்பு

இதுகுறித்து மத்திய மண்டல போலீஸ் ஐ.ஜி. சீமந்த்குமார் சிங் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில், இந்த சம்பவம் தொடர்பாக 3 மர்மநபர்களை பிடிக்க போலீஸ் சூப்பிரண்டு, துணை போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் 6 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. மர்மநபர்கள் தலைமறைவாக இருக்கும் இடம் பற்றி போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அவர்கள் இருக்கும் இடத்தை போலீசார் சுற்றிவளைத்துள்ளனர். 3 பேரும் கூடிய விரைவில் பிடிபடுவார்கள் என்றார்.

இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு திவ்யா கோபிநாத் கூறுகையில், கோலாரில் இருந்து பெங்களூருவுக்கு இளம்பெண்ணை காரில் கடத்தி கற்பழித்த சம்பவம் தொடர்பாக 6 தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். தனிப்படை போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், தொட்டவல்லபி கிராமத்தை சேர்ந்த விஜயகுமார் (22) என்பவர் பவித்ராவை ஏமாற்றி காரில் கடத்தி சென்றது தெரியவந்துள்ளது. தற்போது விஜயகுமார் உள்பட 3 பேர் தலைமறைவாக உள்ளனர். அவர்களை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள். கூடிய விரைவில் 3 பேரும் பிடிபடுவார்கள் என்றார்.

பெரும் பரபரப்பு

பெங்களூரு கம்மனஹள்ளியில் கடந்த 1–ந்தேதி அதிகாலையில் புத்தாண்டு கொண்டாட்டம் முடிந்து வீட்டுக்கு சென்ற இளம்பெண்ணுக்கு 2 பேர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் கர்நாடகம் மட்டுமின்றி நாட்டையே உலுக்கியது. அந்த சம்பவம் மறைவதற்குள், கோலாரில் இருந்து பெங்களூருவுக்கு இளம்பெண்ணை காரில் கடத்தி கற்பழித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.