மாநில செய்திகள்

கள்ளத்தொடர்பு விவகாரத்தில் வக்கீல் சுட்டுக்கொலைகள்ளக்காதலியின் கணவர்-மாமனார் கைதுதிடுக்கிடும் தகவல்கள் + "||" + Clandestine dealings In the case of Lawyer shot dead

கள்ளத்தொடர்பு விவகாரத்தில் வக்கீல் சுட்டுக்கொலைகள்ளக்காதலியின் கணவர்-மாமனார் கைதுதிடுக்கிடும் தகவல்கள்

கள்ளத்தொடர்பு விவகாரத்தில் வக்கீல் சுட்டுக்கொலைகள்ளக்காதலியின் கணவர்-மாமனார் கைதுதிடுக்கிடும் தகவல்கள்
பெங்களூருவில், கள்ளத்தொடர்பு விவகாரத்தில் வக்கீலை சுட்டுக்கொன்ற வழக்கில் கள்ளக்காதலியின் கணவர்-மாமனார் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
பெங்களூரு,

பெங்களூருவில், கள்ளத்தொடர்பு விவகாரத்தில் வக்கீலை சுட்டுக்கொன்ற வழக்கில் கள்ளக்காதலியின் கணவர்-மாமனார் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். கைதானவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.


வக்கீல் சுட்டுக்கொலை

பெங்களூரு புறநகர் நெலமங்களாவை சேர்ந்தவர் கேசவ மூர்த்தி. இவருடைய மகன் அமித்(வயது 35). திருமணம் ஆன இவர் வக்கீலாக பணியாற்றி வந்தார். இவருக்கும், அரசு அதிகாரியாக பணியாற்றி வந்த ஸ்ருதி(29) என்பவருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. ஸ்ருதி, ராஜேஷ்(35) என்பவரின் மனைவி ஆவார். ராஜேஷ், கம்ப்யூட்டர் என்ஜினீயர் ஆவார். இந்த நிலையில், கள்ளத்தொடர்பு விவகாரம் ராஜேசுக்கு தெரியவந்துள்ளது. இதையடுத்து கள்ளத்தொடர்பை கைவிடும்படி ஸ்ருதியிடம், ராஜேஷ் கூறியுள்ளார். இருப்பினும், ஸ்ருதி தனது கள்ளத்தொடர்பை கைவிடவில்லை என கூறப்படுகிறது.இந்த நிலையில், கடந்த 13-ந் தேதி சோழதேவனஹள்ளி அருகே காரில் அமர்ந்து ஸ்ருதியும், அமித்தும் பேசி கொண்டிருந்தனர். அப்போது, அங்கு தனது தந்தை கோபால கிருஷ்ணாவுடன் (78) சென்ற ராஜேஷ் துப்பாக்கியால் அமித்தை சுட்டுள்ளார். இதில், குண்டு காயம் அடைந்த அமித் பரிதாபமாக இறந்தார். இதனால் மனம் உடைந்த ஸ்ருதி தனது காரில் தனியார் தங்கும் விடுதிக்கு சென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கணவர்-மாமனார் கைது

இதுகுறித்த புகாரின் பேரில் சோழதேவனஹள்ளி போலீசார் வழக்குப்பதிவு ஸ்ருதியின் கணவர் ராஜேஷ், ராஜேசின் தந்தை கோபால கிருஷ்ணா ஆகியோரை கைது செய்தனர். இவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். அதன் விவரம் வருமாறு:-

கடந்த சில மாதங்களாக ஸ்ருதியின் நடத்தையில் அவருடைய கணவர் ராஜேசுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால், ஸ்ருதியின் நடவடிக்கையை கண்காணிக்க கடந்த சில தினங்களுக்கு முன்பு அவருடைய காரில் ராஜேஷ் ஜி.பி.எஸ். கருவி பொருத்தியுள்ளார். சம்பவத்தன்று ரெயில்வே கொல்லஹள்ளியில் நடைபெறும் அதிகாரிகளின் கூட்டத்திற்கு செல்வதாக கூறி ஸ்ருதி வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். ஆனால், ஸ்ருதியின் கார் எசருகட்டா ரோட்டில் சென்றுள்ளது. இதை காரில் உள்ள ஜி.பி.எஸ். கருவி மூலம் ராஜேஷ் அறிந்து கொண்டார்.

போலீஸ் காவல்

மேலும், ஸ்ருதி தனது கள்ளக்காதலனை சந்திக்க செல்வதை ராஜேஷ் உறுதியாக நம்பினார். இதுபற்றி அவர் தனது தந்தை கோபால கிருஷ்ணாவிடம் கூறியுள்ளார். இதையடுத்து 2 பேரும் அங்கு சென்றுள்ளனர். அப்போது, காரின் உள்ளே ஸ்ருதியும், அமித்தும் இருந்துள்ளனர். அப்போது, ஆத்திரமடைந்த ராஜேஷ் துப்பாக்கியால் அமித்தை சுட்டு கொலை செய்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த ஸ்ருதி தனியார் தங்கும் விடுதிக்கு சென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

மேலும், சோழதேவனஹள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து அமித்தை கொலை செய்ததாக ஸ்ருதியின் கணவர் ராஜேசையும், கொலைக்கு உடந்தையாக செயல்பட்டதாக ஸ்ருதியின் மாமனார் கோபால கிருஷ்ணாவையும் கைது செய்தனர். முன்னதாக ‘தனக்கு வயது அதிகம் என்பதால் கொலையை தான் செய்ததாக கூறி போலீசில் சரண் அடைகிறேன். நீ உனது 2 குழந்தைகளையும் நன்றாக வளர்க்க வேண்டும்‘ என கோபால கிருஷ்ணா தனது மகன் ராஜேசிடம் கூறி போலீசில் சரண் அடைய முயன்றதும் தெரியவந்தது. கைதான 2 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தி போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

ஆசிரியரின் தேர்வுகள்...