மாவட்ட செய்திகள்

ரூ.3¼ கோடி செல்லாத ரூபாய் நோட்டுகள் பறிமுதல் 4 பேர் கைது + "||" + Not worth Rs.3 crore Banknotes seizure

ரூ.3¼ கோடி செல்லாத ரூபாய் நோட்டுகள் பறிமுதல் 4 பேர் கைது

ரூ.3¼ கோடி செல்லாத ரூபாய் நோட்டுகள் பறிமுதல் 4 பேர் கைது
பெங்களூருவில், கமி‌ஷன் அடிப்படையில் மாற்ற முயன்ற ரூ.3¼ கோடி மதிப்பிலான செல்லாத 500, 1,000 ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

பெங்களூரு,

பெங்களூருவில், கமி‌ஷன் அடிப்படையில் மாற்ற முயன்ற ரூ.3¼ கோடி மதிப்பிலான செல்லாத 500, 1,000 ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

பெங்களூரு சினீவாகிலு சிக்னல் அருகே நேற்று இரவு விவேக் நகர் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு வந்த காரை நிறுத்தி அவர்கள் சோதனையிட்டனர். அப்போது, காரின் உள்ளே இருந்த பைகளில் செல்லாத 500, 1,000 ரூபாய் நோட்டுகள் ரூ.3¼ கோடி கட்டுக்கட்டாக இருப்பது தெரியவந்தது.

இதற்கிடையே, காரில் இருந்த 2 பேர் இறங்கி ஓடிவிட்டனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் காரில் இருந்த மற்ற 4 பேரையும் பிடித்து விசாரித்தனர்.

விசாரணையில், பைகளில் உள்ள ரூ.3¼ கோடி மதிப்பிலான செல்லாத ரூபாய் நோட்டுகள் கொல்கத்தாவை சேர்ந்த சவுரப் ஜெயின் என்பவருக்கு சொந்தமானது என்பதும், இந்த செல்லாத ரூபாய் நோட்டுகளை கமி‌ஷன் அடிப்படையில் மாற்ற முயன்றதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

கைதானவர்களின் பெயர்கள் அயூப், அம்ஜத், அஜிம், அதிக் என்பதும், சவுரப் ஜெயின் மற்றும் மகேஷ் ஆகியோர் காரில் இருந்து இறங்கி ஓடியதும் தெரியவந்தது. கைதானவர்களிடம் இருந்து ரூ.3¼ கோடி செல்லாத ரூபாய் நோட்டுகள், கார் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. இதுகுறித்து விவேக் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான 2 பேரை வலைவீசி தேடி வருகிறார்கள்.