மாவட்ட செய்திகள்

கே.எஸ்.ஆர்.டி.சி. சார்பில் 23 புதிய அதிநவீன சொகுசு பஸ்களின் சேவை + "||" + KSRTC On behalf of 23 New Sophisticated Luxury Buses Service

கே.எஸ்.ஆர்.டி.சி. சார்பில் 23 புதிய அதிநவீன சொகுசு பஸ்களின் சேவை

கே.எஸ்.ஆர்.டி.சி. சார்பில் 23 புதிய அதிநவீன சொகுசு பஸ்களின் சேவை
கே.எஸ்.ஆர்.டி.சி. சார்பில் 23 புதிய அதிநவீன சொகுசு பஸ்களின் சேவையை முதல்-மந்திரி சித்தராமையா தொடங்கி வைத்தார்.
பெங்களூரு,

கர்நாடக அரசு போக்குவரத்து கழகம்(கே.எஸ்.ஆர்.டி.சி.) சார்பில் 23 புதிய ‘ஐராவத் கிளப் கிளாஸ்’ அதிநவீன சொகுசு பஸ்களின் சேவை தொடக்க விழா பெங்களூரு விதான சவுதா வளாகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் முதல்-மந்திரி சித்தராமையா கலந்து கொண்டு, புதிய பஸ்களின் சேவையை கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இந்த விழாவில் போக்குவரத்து மந்திரி எச்.எம்.ரேவண்ணா பேசியதாவது:-

இன்று(அதாவது நேற்று) புதிதாக 23 ‘ஐராவத் கிளப் கிளாஸ்’ அதிநவீன சொகுசு பஸ்களின் சேவை தொடங்கப்பட்டுள்ளது. இதில் பயணிகளுக்கு தேவையான வசதிகள் செய்யப்பட்டுள்ளன. வருகிற டிசம்பர் மாதத்தில் மேலும் 171 சொகுசு பஸ்கள் அறிமுகம் செய்யப்படும். நாட்டிலேயே அரசு சார்பில் இத்தகைய சொகுசு பஸ்களின் சேவை கர்நாடகத்தில் தான் தொடங்கப்பட்டுள்ளது. கர்நாடகத்தில் கடந்த 4 ஆண்டுகளில் புதிதாக 7,333 பஸ்கள் வாங்கப்பட்டுள்ளன.

இவ்வாறு எச்.எம்.ரேவண்ணா பேசினார்.

51 இருக்கைகள்

இதுவரை உள்ள பஸ்களை விட அதிக நீளம் கொண்ட இந்த புதிய பஸ்களில் 51 இருக்கைகள் உள்ளன. இதில் பி.எஸ்.4 என்ற என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த பஸ்களில் கியர்கள் தானாகவே மாறும் தன்மை கொண்டவை ஆகும். அதாவது கியரை ஓட்டுனர் மாற்ற வேண்டிய அவசியம் இல்லை. வேகத்திற்கு ஏற்றார்போல் கியர் மாறிவிடும். வளைவுகளில் எளிதாக திரும்பும் வகையில் பஸ்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

பயணிகள் இருக்கையில் அமர்ந்து, கால்களை நன்றாக நீட்டி வைத்துக்கொள்ளும் வகையில் இடவசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதனால் பயணிகள் நீண்ட தூரம் பயணம் செய்தாலும் அவர்களுக்கு எந்தவித உடல் சோர்வோ அல்லது வலியோ இருக்காது என்று போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.

சென்னை, மும்பை

இந்த புதிய பஸ்கள் பெங்களூருவில் இருந்து கொல்கத்தா, சென்னை, மும்பை, விஜயவாடா, ஸ்ரீஹரிகோட்டா, விராஜ்பேட்டை, மடிகேரி, மைசூரு, மணிப்பால், மங்களூரு ஆகிய இடங்களுக்கு இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விழாவில் போலீஸ் மந்திரி ராமலிங்கரெட்டி உள்பட பலர் கலந்து கொண்டனர்.