மாவட்ட செய்திகள்

காசோலையை திரும்ப ஒப்படைக்க முடிவு: சித்தராமையாவை சந்திக்க அனுமதி கேட்டு கடிதம் + "||" + The check Decide to hand over Letter to ask permission to meet siddaramaiah

காசோலையை திரும்ப ஒப்படைக்க முடிவு: சித்தராமையாவை சந்திக்க அனுமதி கேட்டு கடிதம்

காசோலையை திரும்ப ஒப்படைக்க முடிவு: சித்தராமையாவை சந்திக்க அனுமதி கேட்டு கடிதம்
ரூ.10 லட்சம் காசோலையை திரும்ப ஒப்படைக்க சாளுமரத திம்மக்கா முடிவு செய்துள்ளார். சித்தராமையாவை சந்திக்க அவர் அனுமதி கேட்டு கடிதம் எழுதியுள்ளார்.

பெங்களூரு,

கர்நாடக மாநிலத்தில் ஏராளமான ஆலமரங்களை நட்டு சுற்றுச்சூழலை பாதுகாத்தவர் சாளுமரத திம்மக்கா (வயது 106). துமகூரு மாவட்டத்தை சேர்ந்தவரான இவர், வயது முதிர்வு காரணமாக சமீப காலமாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில், சமீபத்தில் முதல்–மந்திரி சித்தராமையா, சாளுமரத திம்மக்காவின் மருத்துவ செலவுக்காக ரூ.10 லட்சம் அடங்கிய காசோலையை அவரிடம் வழங்கினார்.

இந்த நிலையில், முதல்–மந்திரி சித்தராமையாவுக்கு சாளுமரத திம்மக்கா கடிதம் ஒன்று எழுதியுள்ளார். 3 பக்கம் கொண்ட கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:–

‘நான் ஒரு தலித் பெண். சாதி அடிப்படையில் நான் அங்கீகரிக்கப்படுவதையோ அல்லது எனக்கு வெகுமதி கிடைப்பதையோ நான் விரும்பவில்லை. எனது ரசிகர்கள் மற்றும் வளர்ப்பு மகன் ஆகியோர் என்னை நன்றாக பார்த்து கொள்கிறார்கள். நான் இன்றும் வாழ்கிறேன் என்றால் அதற்கு அவர்கள் தான் காரணம். சமீபத்தில் நான் உங்களை (சித்தராமையா) சந்தித்தேன். அப்போது எனது தேவைகளை ஒரு மாதத்தில் நிறைவேற்றுவதாக கூறினீர்கள். தற்போது 2 மாதங்கள் ஆகியும் எனது தேவைகளை நீங்கள் நிறைவேற்றவில்லை. ரஞ்சி கிரிக்கெட் வீரர்கள், கிராமிய கலைஞர்கள் உள்பட பலருக்கு உடனடியாக வெகுமதிகள் கிடைக்க, எனக்கு கிடைப்பது இல்லை. எனக்கு உதவுவதாக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட அறிவுப்பும் பொய்யானதாக உள்ளது‘ என்பன போன்ற பல்வேறு வி‌ஷயங்கள் குறிப்பிடப்பட்டு உள்ளன.

மேலும், சமீபத்தில் சித்தராமையா வழங்கிய ரூ.10 லட்சம் காசோலையை அவரிடமே திரும்ப ஒப்படைக்க சாளுமரத திம்மக்கா முடிவு செய்துள்ளார். இதற்காக அவர் சித்தராமையாவை சந்திக்கவும் அந்த கடிதத்தின் மூலம் அனுமதி கேட்டுள்ளார்.

இதுகுறித்து சாளுமரத திம்மக்காவின் வளர்ப்பு மகன் உமேஷ் கூறுகையில், ‘வாழும் சாதனையாளர்களுக்கு உரிய அங்கீகாரம் மற்றும் மரியாதை கிடைப்பது இல்லை. அவர்கள் இறந்த பிறகு அவர்களின் சிலை அல்லது படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்வார்கள். இது நியாயமற்றது. அரசியல் அந்தஸ்துக்காக அரசியல்வாதிகள் பொதுமக்கள் முன்னிலையில் பல்வேறு உறுதிகளை கூறுகிறார்கள். ஆனால் அதை அவர்கள் நிறைவேற்றுவது இல்லை.

வயது முதிர்வால் சாளுமரத திம்மக்கா சமீப காலமாக பலமுறை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். அரசு சார்பில் அவருக்கு ரூ.2 கோடி வெகுமதி மற்றும் 10 ஏக்கர் நிலம் கொடுப்பதாக கூறியது. ஆனால் இன்னும் அதை வழங்கவில்லை. அவருக்கு அரசு சார்பில் ரூ.500 உதவித்தொகையாக வழங்கப்பட்டது. அதுவும் நிறுத்தப்பட்டு இருக்கிறது. திம்மக்கா தலித் பெண்ணாக இருப்பதால் தான் இந்த நிலையோ?‘ என்றார்.