மாவட்ட செய்திகள்

முதியவர் மீது போலீசார் தாக்குதல் ‘ஷூ’ அணிந்த கால்களால் யாரும் உதைக்கவில்லை + "||" + Shoes wearing shoe No one kicked

முதியவர் மீது போலீசார் தாக்குதல் ‘ஷூ’ அணிந்த கால்களால் யாரும் உதைக்கவில்லை

முதியவர் மீது போலீசார் தாக்குதல் ‘ஷூ’ அணிந்த கால்களால் யாரும் உதைக்கவில்லை
முதியவர் மீது போலீசார் தாக்குதல் ‘ஷூ’ அணிந்த கால்களால் யாரும் உதைக்கவில்லை போலீஸ் சூப்பிரண்டின் பேட்டியால் சர்ச்சை.

கொள்ளேகால்,

நாகவள்ளி கிராமத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு முதல்–மந்திரி சித்தராமையாவுக்கு கை கொடுக்க முயன்ற முதியவரை போலீசார் தாக்கினர். தற்போது அவரை யாரும் ‘ஷூ’ அணிந்த கால்களால் உதைக்கவில்லை என்று கூறி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பேட்டி அளித்துள்ளார். இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

சாம்ராஜ்நகர் தாலுகா நாகவள்ளி கிராமத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு காங்கிரஸ் அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் மற்றும் பல்வேறு வளர்ச்சித்திட்டப் பணிகள் தொடக்க விழா நடந்தது. விழாவில் முதல்–மந்திரி சித்தராமையா கலந்து கொண்டு பேசினார். அவர் பேசிக் கொண்டிருந்தபோது, கூட்டத்தில் கலந்து கொண்டிருந்த ஒரு முதியவர் மேடைக்கு அருகே சென்று சித்தராமையாவுக்கு கைகொடுக்க முயன்றதாக தெரிகிறது.

இதைப்பார்த்த 2 போலீஸ்காரர்கள் மற்றும் ஒரு சப்–இன்ஸ்பெக்டர் என மொத்தம் 3 பேர் சேர்ந்து அந்த முதியவரை சரமாரியாக தாக்கி அடித்து, உதைத்து, அவர் மீது தடியடி நடத்தியதாக தெரிகிறது. இதுதொடர்பான வீடியோ காட்சிகள் கன்னட செய்தி தொலைக்காட்சிகளில் வெளியாகி மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தர்மேந்திர குமார் மீனாவின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அவர் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யும்படி துணை போலீஸ் சூப்பிரண்டு கங்காதருக்கு உத்தரவிட்டார். அதன்பேரில் நேற்று துணை போலீஸ் சூப்பிரண்டு கங்காதர், விசாரணை அறிக்கையை தாக்கல் செய்தார்.

அதையடுத்து போலீஸ் சூப்பிரண்டு தர்மேந்திர குமார் மீனா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

சம்பவம் நடந்தபோது நான் அருகில் இல்லை. தற்போது விசாரணையில் அந்த முதியவர் போலீசாரின் பாதுகாப்பை மீறி செயல்பட்டதாகவும், அதனால் அவரை போலீசார் குண்டுக்கட்டாக தூக்கிச் சென்றதாகவும் தான் தெரியவந்துள்ளது. போலீசார் அந்த முதியவரை தாக்கவோ, அவர் மீது தடியடி நடத்தவோ, ‘ஷூ’ அணிந்த கால்களால் உதைக்கவோ இல்லை.

இதுதொடர்பாக செய்தி தொலைக்காட்சிகளில் வெளியான வீடியோ காட்சிகளை ஆய்வு செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

போலீஸ் சூப்பிரண்டின் இந்த பேட்டி தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அவர், முதியவரை போலீசாரும் யாரும் ‘ஷூ’ அணிந்த கால்களினால் உதைக்கவில்லை என்று குறிப்பிட்டுள்ளார். ஆனால் தொலைக்காட்சியில் வெளியான வீடியோவில் போலீசார் ‘ஷூ’ அணிந்த கால்களினால் முதியவரை உதைப்பது தெளிவாக தெரிகிறது. இதுகுறித்து முதல்–மந்திரி சித்தராமையா நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று விவசாயிகள் சங்கத்தினர் உள்பட பல்வேறு அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.