மாவட்ட செய்திகள்

கோவில் குளத்தில் மூழ்கி போலீஸ்காரர் பலி + "||" + The temple drowned in the pool and killed the policeman

கோவில் குளத்தில் மூழ்கி போலீஸ்காரர் பலி

கோவில் குளத்தில் மூழ்கி போலீஸ்காரர் பலி
மலவள்ளி தாலுகாவில், கை–கால்கள் கழுவும்போது கால் தவறி கோவில் குளத்தில் விழுந்த போலீஸ்காரர் தண்ணீரில் மூழ்கி பலியானார்.

கொள்ளேகால்,

சாம்ராஜ்நகர் மாவட்டம் குண்டலுபேட்டை தாலுகா பேகூர் போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வந்தவர் சந்திரசேகர்(வயது 30). இவருக்கு திருமணமாகி பூஜா என்ற மனைவியும், ஒரு ஆண் குழந்தையும் உள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் சந்திரசேகர் தனது குடும்பத்தினருடன் மண்டியா மாவட்டம் மலவள்ளி தாலுகாவில் உள்ள மத்தி தாளேஸ்வரா கோவிலுக்கு சென்றார்.

கோவிலில் சாமி தரிசனம் செய்த அவர் பின்னர் கோவிலுக்கு பின்பகுதியில் உள்ள குளத்திற்கு சென்று கை, கால்களை கழுவிக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக அவர் குளத்தில் தவறி விழுந்தார். மேலும் அவர் தத்தளித்தபடி உயிருக்கு போராடினார்.

அதைப்பார்த்த அவருடைய குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவர்கள் சந்திரசேகரை மீட்க முயன்றனர். ஆனால் அதற்குள் அவர் தண்ணீரில் மூழ்கி பலியானார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த கப்பள்ளி போலீசார், தீயணைப்பு வீரர்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

பின்னர் குளத்தில் இருந்து சந்திரசேகரின் உடலை தீயணைப்பு படையினர் மீட்டனர். அதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக மலவள்ளி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து கப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.