மாவட்ட செய்திகள்

பிரகாஷ்ராஜ், எழுத்தாளர் கிரீஸ் கர்னாட் உருவப்பொம்மை எரிப்பு + "||" + Prakashraj, writer Grees Karnat Figurative toy flares

பிரகாஷ்ராஜ், எழுத்தாளர் கிரீஸ் கர்னாட் உருவப்பொம்மை எரிப்பு

பிரகாஷ்ராஜ், எழுத்தாளர் கிரீஸ் கர்னாட் உருவப்பொம்மை எரிப்பு
நக்சல்களை ஊக்குவிப்பதாக கூறி நடிகர் பிரகாஷ்ராஜ், எழுத்தாளர் கிரீஸ் கர்னாட்டின் உருவப்பொம்மையை எரித்து பா.ஜனதாவினர் போராட்டம் நடத்தினர்.
பெங்களூரு ராஜராஜேஸ்வரி நகரை சேர்ந்த பெண் பத்திரிகையாளரான கவுரி லங்கேசை கடந்த ஆண்டு(2017) செப்டம்பர் 5-ந் தேதி மர்மநபர்கள் சுட்டுக்கொன்றனர். இந்த நிலையில் கவுரி லங்கேசின் ஓராண்டு நினைவு தினத்தையொட்டி பெங்களூருவில் நடந்த பேரணியில் நடிகர் பிரகாஷ்ராஜ், பிரபல எழுத்தாளர் கிரீஸ் கர்னாட் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த பேரணியின் போது கிரீஸ் கர்னாட் நான் ஒரு நகர நக்சலைட்டு என்ற பதாகையை கையில் வைத்து கொண்டு வந்தார். அதுபோல நடிகர் பிரகாஷ்ராஜிம் கையில் பதாகையை கையில் வைத்து கொண்டு சென்றார்.

இந்த நிலையில் நக்சல்களை ஊக்குவிப்பதாக கூறி பிரகாஷ்ராஜ், கிரீஸ் கர்னாட்டை கண்டித்து நேற்று முன்தினம் சாம்ராஜ்நகர் டவுனில் பா.ஜனதாவினர் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தின் போது பிரகாஷ் ராஜ், கிரீஸ் கர்னாட்டின் உருவ பொம்மைகளுக்கு பா.ஜனதாவினர் தீ வைத்து எரித்தனர். இதுபற்றி அறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பா.ஜனதாவினரிடம் பேச்சுவார்த்தை நடத்தி அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம்; ஆயிரக்கணக்கான ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் கைது
9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட ஆயிரக்கணக்கான ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் இன்று கைது செய்யப்பட்டனர்.
2. ஆசிரியர்களின் போராட்டத்தினால் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கும் - அன்பழகன் எம்.எல்.ஏ. வேதனை
சொசைட்டி கல்லூரி ஆசிரியர்களின் போராட்டத்தினால் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாக அன்பழகன் எம்.எல்.ஏ. வேதனையுடன் கூறினார்.
3. மின்துறை கருத்துகேட்பு கூட்டத்தில் திடீர் போராட்டம் போலீசார் குண்டுக்கட்டாக தூக்கி வெளியேற்றினர்
மின்துறை கருத்துகேட்பு கூட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் குண்டுக்கட்டாக தூக்கி வெளியேற்றினர்.
4. ஈரோடு மாவட்டத்தில் அரசு ஊழியர் –ஆசிரியர் வேலை நிறுத்த போராட்டம் தொடங்கியது அலுவலகங்கள், பள்ளிக்கூடங்களில் பணிகள் பாதிப்பு
ஈரோடு மாவட்டத்தில் அரசு ஊழியர்–ஆசிரியர் வேலை நிறுத்த போராட்டம் நேற்று தொடங்கியது. இதனால் அரசு அலுவலகங்கள், பள்ளிக்கூடங்களில் பணிகள் பாதிக்கப்பட்டன.
5. ஜாக்டோ–ஜியோவினர் தொடர் வேலை நிறுத்த போராட்டம் அரசு பணிகள் முடங்கியதால் பொதுமக்கள் பாதிப்பு
மாவட்டத்தில் ஜாக்டோ–ஜியோவினரின் தொடர் வேலை நிறுத்த போராட்டம் காரணமாக பெரும்பாலான அரசு பணிகள் முடங்கின. இதன் காரணமாக பொதுமக்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டனர்.