மாவட்ட செய்திகள்

கூட்டணி ஆட்சியை கவிழ்க்க முயற்சி செய்யவில்லை : எடியூரப்பா பேட்டி + "||" + The coalition did not try to topple the regime: Yeddyurappa Interview

கூட்டணி ஆட்சியை கவிழ்க்க முயற்சி செய்யவில்லை : எடியூரப்பா பேட்டி

கூட்டணி ஆட்சியை கவிழ்க்க முயற்சி செய்யவில்லை : எடியூரப்பா பேட்டி
கர்நாடக பா.ஜனதா தலைவர் எடியூரப்பா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
பெங்களூரு,

நாங்கள் நாடாளுமன்ற தேர்தலுக்கு தீவிரமாக தயாராகி வருகிறோம். தேர்தல் பணிகளை தொடங்கி விட்டோம். ஆனால் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி ஆட்சியை கவிழ்க்க நாங்கள் முயற்சி செய்வதாக அக்கட்சியினர் கூறுவது ஆச்சரியம் அளிப்பதாக உள்ளது.இந்த கூட்டணி ஆட்சியை கவிழ்க்க நாங்கள் முயற்சி செய்யவில்லை. ஆனால் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சில தலைவர்களும், நிர்வாகிகளும் பா.ஜனதாவில் சேர உள்ளனர். நான் மாநிலத்தில் சுற்றுப்பயணம் செய்ய திட்டமிட்டுள்ளேன். நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகி வருவதால் நான் மீண்டும் டெல்லிக்கு செல்ல மாட்டேன்.


சில தொகுதிகளில் பலமான வேட்பாளர்களை நிறுத்த நாங்கள் திட்டமிட்டுள்ளோம். நாடாளுமன்ற தேர்தலில் குறைந்தது 25 தொகுதிகளில் வெற்றி இலக்கு நிர்ணயித்துள்ளோம். முதல்-மந்திரி குமாரசாமி நாளை(அதாவது இன்று) ஒரு குழுவுடன் டெல்லி சென்று பிரதமரை சந்திக்கிறார். அந்த குழுவில் பா.ஜனதா தலைவர்களும் இடம் பெற்று உள்ளனர். குடகு உள்பட பல்வேறு மாவட்டங்களில் மழை வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு நிதி உதவி வழங்குமாறு கோரிக்கை விடுக்க உள்ளனர்.

இவ்வாறு எடியூரப்பா கூறினார். 

தொடர்புடைய செய்திகள்

1. எடியூரப்பா பேரம் பேசுவதுபோல் ஆடியோ குமாரசாமி வெளியிட்டார்; பரபரப்பு குற்றச்சாட்டு
ஜனதாதளம் (எஸ்) எம்.எல்.ஏ.வை இழுக்க எடியூரப்பா பேரம் பேசுவது போன்ற ஆடியோவை முதல்-மந்திரி குமாரசாமி வெளியிட்டு பரபரப்பு குற்றச்சாட்டை கூறியுள்ளார்.
2. எடியூரப்பா தலைமையில் பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்: பெங்களூருவில் நடந்தது
கா்நாடக சட்டசபை கூட்டத்தொடர் தொடங்க உள்ள நிலையில் பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் எடியூரப்பா தலைமையில் நடைபெற்றது.
3. குற்றப்பிரிவு போலீசாரை அரசு தவறாக பயன்படுத்துகிறது : எடியூரப்பா குற்றச்சாட்டு
மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்து விட்டதாகவும், குற்றப் பிரிவு போலீசாரை அரசு தவறாக பயன்படுத்துவதாகவும் பா.ஜனதா தலைவர் எடியூரப்பா குற்றச்சாட்டு கூறியுள்ளார்.
4. கர்நாடக பா.ஜனதாவில் பரபரப்பு : எடியூரப்பாவுடன் ஜனார்த்தனரெட்டி திடீர் சந்திப்பு
பெங்களூருவில் பா.ஜனதா மாநில தலைவர் எடியூரப்பாவை முன்னாள் மந்திரி ஜனார்த்தனரெட்டி திடீரென்று சந்தித்து பேசினார். இந்த சம்பவம் கர்நாடக பா.ஜனதாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
5. ஜனதாதளம்(எஸ்) குடும்ப கட்சி என்று விமர்சிக்கும் எடியூரப்பா, தனது மகனை சிவமொக்கா தொகுதியில் நிறுத்தியது ஏன்?
ஜனதாதளம்(எஸ்) கட்சி ஒரு குடும்ப கட்சி என்று விமர்சித்து வரும் எடியூரப்பா, இடைத்தேர்தலில் தனது மகனை சிவமொக்கா நாடாளுமன்ற தொகுதியில் நிறுத்தியது ஏன்? என்று மந்திரி எச்.டி.ரேவண்ணா கேள்வி எழுப்பியுள்ளார்.