மாவட்ட செய்திகள்

மேகதாது திட்டத்திற்கு தமிழகத்தின் அனுமதி தேவை இல்லைசித்தராமையா பேச்சு + "||" + For the cloud project In Tamil Nadu of the No permission is required

மேகதாது திட்டத்திற்கு தமிழகத்தின் அனுமதி தேவை இல்லைசித்தராமையா பேச்சு

மேகதாது திட்டத்திற்கு தமிழகத்தின் அனுமதி தேவை இல்லைசித்தராமையா பேச்சு
மேகதாது திட்டத்திற்கு தமிழகத்தின் அனுமதி தேவை இல்லை என்று சித்தராமையா கூறினார்.
பெங்களூரு, 

மேகதாது திட்டத்திற்கு தமிழகத்தின் அனுமதி தேவை இல்லை என்று சித்தராமையா கூறினார்.

அரசியல் நோக்கத்திற்காக...

பெங்களூருவில் நேற்று மேகதாது திட்டம் குறித்து ஆலோசனை கூட்டம் முதல்-மந்திரி குமாரசாமி தலைமையில் நடைபெற்றது. இதில் கர்நாடக முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா பேசியதாவது:-

மேகதாதுவில் புதிய அணை கட்டும் திட்டம் முந்தைய காங்கிரஸ் அரசின் மிக முக்கியமான திட்டம் ஆகும். இந்த திட்டத்தால் தமிழகத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை. ஆனாலும் அரசியல் நோக்கத்திற்காக தமிழக அரசு பிரச்சினை செய்கிறது.

அனுமதி தேவை இல்லை

கர்நாடகத்தில் இந்த திட்டத்தை செயல்படுத்த எந்த தடையும் இல்லை. சுப்ரீம் கோர்ட்டு மற்றும் நடுவர் மன்ற தீர்ப்புகளும் கர்நாடகத்திற்கு சாதகமாக உள்ளன. அணை கட்டக்கூடாது என்று எந்த தீர்ப்பிலும் சொல்லப்படவில்லை.

மேகதாது திட்டத்திற்கு தமிழகத்தின் அனுமதி தேவை இல்லை. எதிர்ப்பு தெரிவிக்க தமிழகத்திடம் எந்த ஆதாரங்களும் இல்லை. கர்நாடகத்தின் திட்டம் நியாயமானது. அதனால் கர்நாடக வக்கீல்கள், சுப்ரீம் கோர்ட்டிற்கு தேவையான விவரங்களை வழங்க வேண்டும்.

சிக்கல் ஏற்படும்

ஒருவேளை இதற்கு இடைக்கால தடை விதித்தால், திட்டத்தை செயல்படுத்துவதில் சிக்கல் ஏற்படும். அதனால் தடை ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். தமிழகத்தில் தேர்தல் நடைபெற உள்ளதால், இந்த பிரச்சினையை அந்த மாநில அரசு தீவிரமாக கையில் எடுத்துள்ளது.

இவ்வாறு சித்தராமையா கூறினார்.