மாவட்ட செய்திகள்

மைசூருவில்கள்ளக்காதல் ஜோடி தூக்குப்போட்டு தற்கொலைபோலீஸ் விசாரணை + "||" + In Mysore The thugs committed suicide by hanging Police investigation

மைசூருவில்கள்ளக்காதல் ஜோடி தூக்குப்போட்டு தற்கொலைபோலீஸ் விசாரணை

மைசூருவில்கள்ளக்காதல் ஜோடி தூக்குப்போட்டு தற்கொலைபோலீஸ் விசாரணை
மைசூருவில் கள்ளக்காதல் ஜோடி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மைசூரு,

மைசூரு தாலுகா பிளிகெரே அருகே செல்லஹாளு கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்த்ராஜ் (வயது 35). விவசாயி. இவருக்கும் அதே கிராமத்தை சேர்ந்த ராஜூ என்பவரின் மனைவி சாந்தா (33) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. சாந்தா-ராஜூ தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இதேபோல, ஆனந்த்ராஜூக்கும் ஏற்கனவே திருமணமாகி மனைவி 2 குழந்தைகள் உள்ளனர்.

ஆனந்த்ராஜூம், சாந்தாவும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்தனர். இந்த நிலையில் இவர்களின் கள்ளக்காதல் விவகாரம் இருவீட்டாருக்கும் தெரியவந்தது. இதனால் அவர்கள் 2 பேரையும் கண்டித்துள்ளனர்.

பின்னர் கிராமத்தில் பஞ்சாயத்து நடத்தி சமாதான பேச்சுவார்த்தை நடத்தினார்கள். கள்ளத்தொடர்பை கைவிடும்படியும் பஞ்சாயத்தார் எச்சரிக்கை விடுத்தனர். ஆனாலும் அவர்கள் மறைமுகமாக தங்கள் கள்ளக்காதலை வளர்த்து வந்தனர். இதுபற்றி தெரிந்ததும் 2 பேரின் குடும்பத்தினரும் பிளிகெரே போலீசில் புகார் கொடுத்தனர்.

போலீசில் புகார் கொடுத்ததால், விசாரணைக்கு பயந்த அவர்கள் தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்தனர். அதன்படி அவர்கள் 2 பேரும் அந்தப்பகுதியில் உள்ள ஒரு மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டனர்.

இதுபற்றிய தகவல் அறிந்ததும் பிளிகெரே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து பார்வையிட்டனர். பின்னர் போலீசார் 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மைசூரு கே.ஆர். அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

போலீஸ் விசாரணையில், கள்ளக்காதல் விவகாரம் பற்றி போலீசில் புகார் கொடுக்கப்பட்டதால், அவர்கள் 2 பேரும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுகுறித்து பிளிகெரே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தொடர்புடைய செய்திகள்

1. மதுரையில் பரிதாபம்: கியாசை திறந்துவிட்டு தீக்குளித்து வாலிபர் தற்கொலை
சிலிண்டரில் உள்ள கியாசை திறந்துவிட்டு தீக்குளித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியது.
2. பேரம்பாக்கம் அருகே வேலை கிடைக்காத ஏக்கத்தில் வாலிபர் தற்கொலை
பேரம்பாக்கம் அருகே வேலை கிடைக்காத ஏக்கத்தில் வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
3. மின்கம்பத்தில் இருந்து தவறி விழுந்து மகன் பலி: வேதனையில் தந்தை வி‌ஷம் குடித்து தற்கொலை
மின்கம்பத்தில் இருந்து தவறி விழுந்து மகன் இறந்த வேதனையில் தந்தை வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
4. பக்கத்து வீட்டில் கொலுசு மாயம்: போலீஸ் விசாரணைக்கு பயந்து வாலிபர் தற்கொலை
பக்கத்து வீட்டில் கொலுசு மாயமானது தொடர்பாக போலீசார் தன்னை விசாரணைக்கு அழைப்பார்கள் என பயந்து வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
5. மது குடித்துவிட்டு தகராறு செய்ததால் ஆத்திரம்; கணவரை கொன்று விட்டு தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடிய பெண், உடந்தையாக இருந்த தம்பியும் சிக்கினார்
பள்ளிப்பட்டு அருகே மது குடித்துவிட்டு தகராறு செய்த கணவரை கொன்று விட்டு, தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடிய பெண்ணை போலீசார் கைது செய்தனர். மேலும் உடந்தையாக இருந்த அவரது தம்பியும் சிக்கினார்.

அதிகம் வாசிக்கப்பட்டவை