மாவட்ட செய்திகள்

முதல்-மந்திரி பதவி வழங்காமல் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு அநீதி தேர்தல் பிரசாரத்தில் குமாரசாமி பேச்சால் காங்கிரசில் சலசலப்பு + "||" + Injustice for Mallikarjuna Karghe Election campaign Kumaraswamy speech is a rumor of Congress

முதல்-மந்திரி பதவி வழங்காமல் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு அநீதி தேர்தல் பிரசாரத்தில் குமாரசாமி பேச்சால் காங்கிரசில் சலசலப்பு

முதல்-மந்திரி பதவி வழங்காமல் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு அநீதி தேர்தல் பிரசாரத்தில் குமாரசாமி பேச்சால் காங்கிரசில் சலசலப்பு
முதல்-மந்திரி பதவி வழங்காமல் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக குமாரசாமி கூறிய கருத்தால் காங்கிரசில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
பெங்களூரு,

கர்நாடகத்தில் காங்கிரஸ்-ஜனதா தளம் (எஸ்) கூட்டணி அரசு நடக்கிறது. குமாரசாமி முதல்-மந்திரியாக உள்ளார். சமீபகாலமாக காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள், கூட்டணி ஒருங்கிணைப்பு குழு தலைவராக உள்ள சித்தராமையா மீண்டும் முதல்-மந்திரியாக வேண்டும் என்று பேசி வருகிறார்கள்.


இது குமாரசாமிக்கு இக்கட்டான சூழ்நிலையை ஏற்படுத்தி வருகிறது. காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களின் இந்த பேச்சால் தேவேகவுடா மற்றும் குமாரசாமி கடும் அதிருப்தியில் உள்ளனர்.

இந்த நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு முதல்-மந்திரி பதவி வழங்காமல் அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக குமாரசாமி பேசியிருக்கிறார். சித்தராமையா மீண்டும் முதல்-மந்திரியாக வேண்டும் என்று எம்.எல்.ஏ.க்கள் பேசி வரும் நிலையில் குமாரசாமியின் இந்த பேச்சு காங்கிரசில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக சட்டசபையில் காலியாக உள்ள குந்துகோல், சிஞ்சோலி ஆகிய தொகுதிகளுக்கு வருகிற 19-ந் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இதையொட்டி சிஞ்சோலியில் காங்கிரஸ் வேட்பாளர் சுபாஷ் ராத்தோட்டை ஆதரித்து முதல்-மந்திரி குமாரசாமி நேற்று முன்தினம் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

நீண்ட காலத்திற்கு முன்பே மல்லிகார்ஜுன கார்கேவுக்கு முதல்-மந்திரி பதவி வழங்கியிருக்க வேண்டும். அவருக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக நான் கருதுகிறேன். அவர் மேற்கொண்ட பணிகளுக்கு காங்கிரசில் அவருக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என்பதை தெளிவாக குறிப்பிட விரும்புகிறேன். இவ்வாறு குமாரசாமி பேசினார்.

தொடர்புடைய செய்திகள்

1. முதல்-மந்திரி குமாரசாமி தலைமையிலான கூட்டணி அரசு மீது சித்தராமையா அதிருப்தி “எனது பேச்சுக்கு மதிப்பில்லை” என பரபரப்பு குற்றச்சாட்டு
முதல்-மந்திரி குமாரசாமி தலைமையிலான கூட்டணி அரசில் எனது பேச்சுக்கு மதிப்பில்லை என்று கூட்டணி ஒருங்கிணைப்பு குழு தலைவர் சித்தராமையா அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.
2. பீகாரில் மூளை காய்ச்சலுக்கு 109 குழந்தைகள் பலி; முதல் மந்திரி மீது பொதுநல வழக்கு
பீகாரில் மூளை காய்ச்சல் நோய்க்கு 109 குழந்தைகள் பலியான விவகாரத்தில் முதல் மந்திரி மீது பொதுநல வழக்கு தொடரப்பட்டு உள்ளது.
3. வருகிற 2021ம் ஆண்டுக்குள் மம்தாவின் அரசு கவிழும்; பா.ஜ.க.
வருகிற 2021ம் ஆண்டுக்குள் மேற்கு வங்காளத்தில் மம்தா தலைமையிலான அரசு கவிழும் என பா.ஜ.க. தெரிவித்துள்ளது.
4. தெலுங்கானா முதல் மந்திரியுடனான ஸ்டாலின் சந்திப்பு மரியாதை நிமித்தமானது; தி.மு.க. அறிக்கை
தெலுங்கானா முதல் மந்திரியுடனான ஸ்டாலின் சந்திப்பு மரியாதை நிமித்தமானது என தி.மு.க. தலைமை தெரிவித்து உள்ளது.
5. முதல்-மந்திரி பட்னாவிஸ் மீதான குற்றச்சாட்டில் ஆதாரம் இல்லை எதிர்க்கட்சி தலைவர் மீது வழக்குப்பதிய தேர்தல் கமிஷன் உத்தரவு
தேர்தல் நடத்தை விதிமுறை மீறல் புகாரில் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் மீதான குற்றச்சாட்டில் ஆதாரம் இல்லை என்று கூறிய தேர்தல் கமிஷன், மேல்-சபை எதிர்க்கட்சி தலைவர் தனஞ்செய் முண்டே மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டு உள்ளது.