மாவட்ட செய்திகள்

பெங்களூருவில் தோழியுடன் ஸ்கூட்டரில் சாகசத்தில் ஈடுபட்ட கல்லூரி மாணவர் கைது - பரபரப்பு தகவல்கள் + "||" + A college student arrested in a scooter adventure with a girlfriend in Bangalore - sensational information

பெங்களூருவில் தோழியுடன் ஸ்கூட்டரில் சாகசத்தில் ஈடுபட்ட கல்லூரி மாணவர் கைது - பரபரப்பு தகவல்கள்

பெங்களூருவில் தோழியுடன் ஸ்கூட்டரில் சாகசத்தில் ஈடுபட்ட கல்லூரி மாணவர் கைது - பரபரப்பு தகவல்கள்
பெங்களூருவில், தோழியுடன் ஆபத்தான முறையில் ஸ்கூட்டரில் சாகசத்தில் ஈடுபட்ட கல்லூரி மாணவரை போலீசார் கைது செய்துள்ளனர். அவரிடம் நடத்திய விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.
பெங்களூரு,

பெங்களூரு புறநகர் தேவனஹள்ளி ரோட்டில் வாலிபர் ஒருவர் இளம்பெண்ணுடன் சேர்ந்து ஸ்கூட்டரில் சாகசம் செய்தபடி சென்றார். அதாவது, ஸ்கூட்டரின் பின்இருக்கையில் இளம்பெண் அமர்ந்து இருக்க, அந்த வாலிபர் ஸ்கூட்டரின் முன்பக்க சக்கரத்தை மேல்நோக்கி தூக்கிய நிலையில் வேகமாக ஓட்டினார்.


மேலும், அந்த வாலிபர் தனது ஒரு காலை இருக்கையின் மீதும், இன்னொரு காலை மேல்நோக்கி நீட்டியபடி முன்சக்கரத்தை தூக்கி ஆபத்தை உணராமல் பயணித்தார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகின. அத்துடன் வாலிபர் தனது காதலியுடன் சாகசத்தில் ஈடுபட்டதாகவும் தகவல்கள் பரவின.

இதுகுறித்து ஹெப்பால் போக்குவரத்து போலீசார் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து கொண்டனர். மேலும் சாகசம் செய்த வாலிபரை பிடிக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வந்தனர். இந்த நிலையில் சாகசம் செய்ததாக பெங்களூரு எலகங்காவில் வசித்து வரும் நூர்அகமது (வயது 21) என்பவரை போலீசார் கைது செய்து விசாரித்தனர்.

விசாரணையில் அவர் எலகங்காவில் உள்ள அரசு கல்லூரியில் பி.காம். படித்து வருவது தெரியவந்தது. மேலும் அவருடைய தந்தை ஆட்டோ டிரைவர் என்பதும், ஸ்கூட்டரில் சாகசம் செய்ய விரும்பி தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வரும் நூர்அகமது தனது நண்பர் இம்ரான் கானின் ஸ்கூட்டரை வாங்கி பயிற்சி செய்தார். இந்த வேளையில் அவருக்கு பழக்கமான தோழி வீதா, நூர்அகமதுவின் சாகசத்தை கண்டு வியந்ததோடு, அவர் விருப்பப்பட்டு நூர்அகமதுவுடன் சென்றதும் தெரியவந்தது. கைதான நூர்அகமதுவிடம் இருந்த ஸ்கூட்டரும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. பெங்களூருவில் பயங்கரம் ஓய்வுபெற்ற பல்கலைக்கழக துணைவேந்தர் படுகொலை
பெங்களூருவில், ஓய்வுபெற்ற பல்கலைக்கழக துணைவேந்தரை படுகொலை செய்த மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.
2. பெங்களூரு அருகே பயங்கரம்; கள்ளத்தொடர்பை கண்டித்த வாலிபர் சுட்டுக்கொலை
பெங்களூரு அருகே கள்ளத்தொடர்பை கண்டித்த வாலிபர் துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக மனைவியின் கள்ளக்காதலனை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.
3. பெங்களூரு மேயர்-துணை மேயர் பதவிகளை பா.ஜனதா கைப்பற்றியது
பெங்களூரு மேயர்-துணை மேயர் பதவிகளை பா.ஜனதா கைப்பற்றி உள்ளது.
4. பெங்களூருவில், போதைப்பொருள் விவகாரத்தில் சூடான் நாட்டு மாணவர் கத்தியால் குத்தி கொலை; 3 பேரை பிடித்து போலீஸ் விசாரணை
பெங்களூருவில் போதைப்பொருள் விவகாரத்தில் சூடான் நாட்டு மாணவர் ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக 3 பேரை பிடித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
5. பெங்களூருவில் இன்று நடக்கிறது: கர்நாடக காங்கிரஸ் தேர்தல் குழு கூட்டம் - வேட்பாளர்களை தேர்வு செய்வது குறித்து ஆலோசனை
கர்நாடக காங்கிரஸ் தேர்தல் குழு கூட்டம் இன்று (வியாழக்கிழமை) நடக்கிறது. இதில் இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை தேர்வு செய்வது குறித்து ஆலோசனை நடத்தப்படுகிறது.