மாவட்ட செய்திகள்

நிவாரண நிதியை மத்திய அரசு விரைவில் வழங்கும்: முதல்-மந்திரி எடியூரப்பா நம்பிக்கை + "||" + Central government to provide relief fund soon: chief minister Yeddyurappa hopes

நிவாரண நிதியை மத்திய அரசு விரைவில் வழங்கும்: முதல்-மந்திரி எடியூரப்பா நம்பிக்கை

நிவாரண நிதியை மத்திய அரசு விரைவில் வழங்கும்: முதல்-மந்திரி எடியூரப்பா நம்பிக்கை
பாதிக்கப்பட்ட மக்களுடன் அரசு உள்ளதாகவும், அதனால் அவர்கள் கவலைப்பட வேண்டாம் என்றும், கூடிய விரைவில் மத்திய அரசு நிவாரண நிதி வழங்கும் என்ற நம்பிக்கை இருப்பதாக முதல்-மந்திரி எடியூரப்பா தெரிவித் துள்ளார்.
பெங்களூரு, 

பெங்களூரு டாலர்ஸ் காலனியில் உள்ள தனது வீட்டில் நேற்று முதல்-மந்திரி எடியூரப்பா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மாநிலத்தில் மழை பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா ஆகியோர் பார்வையிட்டு உள்ளனர். மழை பாதிப்பு குறித்து மத்திய மந்திரிகளிடம் விரிவான அறிக்கை வழங்கப்பட்டு இருக்கிறது. வருகிற 16-ந் தேதி டெல்லிக்கு செல்ல உள்ளேன். அங்கு மத்திய மந்திரிகளை சந்தித்து மாநிலத்தில் மழை பாதிப்புகள், பலியானவர்கள், வீடுகளை இழந்தவர்கள் குறித்து பேச உள்ளேன். அப்போது மாநிலத்தில் நிவாரண பணிகளை மேற்கொள்ள நிதி ஒதுக்கும்படி கோரிக்கை வைக்க உள்ளேன்.

மழையால் ரூ.40 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் கோடி வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது. தற்சமயம் நிவாரண பணிகளை மேற்கொள்ள ரூ.3 ஆயிரம் கோடி வழங்கும்படி ஏற்கனவே மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளேன். கூடிய விரைவில் மத்திய அரசு நிவாரண நிதி வழங்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

மழை பாதித்த பகுதிகளில் நிவாரண பணிகளை மேற்கொள்ள முன்னாள் பிரதமர் தேவேகவுடா, முன்னாள் முதல்-மந்திரிகள் சித்தராமையா, குமாரசாமி ஆகியோர் அரசுக்கு முழு ஆதரவு அளித்துள்ளனர். அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துள்ளேன். நிவாரண பணிகளை மேற்கொள்ள எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்களுக்கு அறிவுறுத்தி உள்ளேன். அதன்படி, அவர்களும் தங்களது சக்தியை மீறி வேலை செய்து வருகிறார்கள்.

பாதிக்கப்பட்ட மக்கள் யாரும் கவலைப்பட வேண்டாம். அதற்கான அவசியமும் இல்லை. மாவட்ட கலெக்டர்கள், அரசு அதிகாரிகள் நிவாரண பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அரசு செய்து கொடுக்கும். அந்த மக்களுடன் நானும், இந்த அரசும் எப்போது இருக்கும் என்று தெரிவித்து கொள்கிறேன்.

இவ்வாறு எடியூரப்பா கூறினார். 

தொடர்புடைய செய்திகள்

1. உளவுத்துறை எச்சரிக்கையால் போலீஸ் பாதுகாப்பு: பொதுமக்கள் பீதி அடைய வேண்டாம் - முதல்-மந்திரி எடியூரப்பா வேண்டுகோள்
உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளதை தொடர்ந்து பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது என்றும், எனவே பொதுமக்கள் பீதி அடைய வேண்டாம் என்றும் முதல்-மந்திரி எடியூரப்பா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
2. கர்நாடக அரசு சார்பில் விவசாயிகள் ஒரு லட்சம் பேருக்கு தலா ரூ.2 ஆயிரம்; திட்டத்தை எடியூரப்பா தொடங்கி வைத்தார்
பிரதமரின் கிசான் சம்மான் திட்டத்தின் கீழ் கர்நாடக அரசு சார்பில் கூடுதல் நிதி வழங்கும் திட்டத்தை முதல்-மந்திரி எடியூரப்பா நேற்று தொடங்கி வைத்தார். இதன்படி ஒரு லட்சம் விவசாயிகளுக்கு முதல் கட்டமாக தலா ரூ.2 ஆயிரம் வீதம் அவர்களின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டு உள்ளது.
3. பெங்களூரு மானேக்‌ஷா மைதானத்தில் நாளை சுதந்திரதின விழா; எடியூரப்பா தேசிய கொடி ஏற்றுகிறார்
பெங்களூரு மானேக்‌ஷா மைதானத்தில் நாளை (வியாழக்கிழமை) நடைபெறும் சுதந்திரதின விழாவில் முதல்-மந்திரி எடியூரப்பா கலந்து கொண்டு தேசிய கொடி ஏற்றுகிறார். சுதந்திரதின விழாவையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
4. 18 நாட்களாக மந்திரிகள் இல்லை: எடியூரப்பா அரசை ‘டிஸ்மிஸ்’ செய்ய வேண்டும்; கவர்னருக்கு காங்கிரஸ் வலியுறுத்தல்
18 நாட்களாக மந்திரிகள் இல்லாததால் எடியூரப்பா அரசை ‘டிஸ்மிஸ்‘ செய்ய வேண்டும் என்று கவர்னருக்கு காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.
5. கர்நாடகத்தில் மழை வெள்ள பாதிப்பு; வீடுகளை இழந்தவர்களுக்கு புதிதாக வீடு கட்டுவதற்கு ரூ.5 லட்சம் : முதல்-மந்திரி அறிவிப்பு
கர்நாடகத்தில் மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு வீடுகளை இழந்தவர் களுக்கு புதிதாக வீடு கட்டுவதற்கு ரூ.5 லட்சம் உதவித்தொகை வழங்கப்படும் என்று முதல்-மந்திரி எடியூரப்பா அறிவித்தார்.