மாவட்ட செய்திகள்

18 நாட்களாக மந்திரிகள் இல்லை: எடியூரப்பா அரசை ‘டிஸ்மிஸ்’ செய்ய வேண்டும்; கவர்னருக்கு காங்கிரஸ் வலியுறுத்தல் + "||" + The state government of yedurappa should be dismissed; Congress urges the governor

18 நாட்களாக மந்திரிகள் இல்லை: எடியூரப்பா அரசை ‘டிஸ்மிஸ்’ செய்ய வேண்டும்; கவர்னருக்கு காங்கிரஸ் வலியுறுத்தல்

18 நாட்களாக மந்திரிகள் இல்லை: எடியூரப்பா அரசை ‘டிஸ்மிஸ்’ செய்ய வேண்டும்; கவர்னருக்கு காங்கிரஸ் வலியுறுத்தல்
18 நாட்களாக மந்திரிகள் இல்லாததால் எடியூரப்பா அரசை ‘டிஸ்மிஸ்‘ செய்ய வேண்டும் என்று கவர்னருக்கு காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.
பெங்களூரு, 

கர்நாடக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் எம்.பி. உக்ரப்பா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

கடும் மழை வெள்ளம் காரணமாக வட கர்நாடகம், தென்கர்நாடகத்தின் உள்மாவட்டங்கள் மற்றும் கடலோர மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. போர்க்கால அடிப்படையில் நிவாரண பணிகளை மேற்கொள்ள வேண்டிய மாநில அரசு, கும்பகர்ணனை போல் ஆழ்ந்த தூக்கத்தில் உள்ளது.

இத்தகைய மோசமான சூழ்நிலையை நிர்வகிக்க மாநிலத்தில் மந்திரிகள் இல்லை. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முதல்-மந்திரி எடியூரப்பா ஒருவர் மட்டுமே ஆய்வு மேற்கொண்டு வருகிறார். இதனால் எந்த பயனும் இல்லை. மந்திரிகள் இல்லாமல் இத்தகைய பேரிடரை சமாளிக்க முடியாது. கர்நாடகத்தில் மாநில அரசே இல்லை என்ற சூழ்நிலை நிலவுகிறது.

இதனால் உரிய நிவாரணம் கிடைக்காமல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மத்திய மந்திரிகள் நிர்மலா சீதாராமன், அமித்ஷா ஆகியோர் கர்நாடகம் வந்து வெள்ள பாதிப்புகளை பார்வையிட்டு சென்றனர். இதுவரை மத்திய அரசு நிதி உதவியை அறிவிக்கவில்லை. கர்நாடகத்திற்கு நியாயமாக கிடைக்க வேண்டிய நிதி உதவி இன்னும் கிடைக்கவில்லை.

கர்நாடகத்தின் மீது உண்மையிலேயே அக்கறை இருந்தால், பிரதமர் மோடி உடனே இங்கு வந்து வெள்ள பாதிப்புகளை நேரில் ஆய்வு செய்ய வேண்டும். இதை தேசிய பேரிடராக அறிவித்து உடனடியாக ரூ.5,000 கோடி நிதி உதவி வழங்க வேண்டும். முதல்-மந்திரி எடியூரப்பா உடனே அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டி வெள்ள பாதிப்புகள் குறித்து ஆலோசிக்க வேண்டும்.

எடியூரப்பா பதவி ஏற்று 18 நாட்கள் ஆகிறது. இன்னும் மந்திரிகள் பதவி ஏற்கவில்லை. இந்த விஷயத்தில் கவர்னர் அமைதியாக இருப்பது ஏன்?. அரசியல் சாசனப்படி மாநிலத்தில் அரசு இருக்கிறதா? என்பதை கவர்னரிடம் கேட்க விரும்புகிறேன். கவர்னர் தாமாக முன்வந்து செயல்பட்டு, இந்த அரசை ‘டிஸ்மிஸ்‘ செய்ய வேண்டும். ஒரு முதல்-மந்திரியை மந்திரிசபை என்று அழைக்க முடியாது.

இன்னும் சில நாட்கள் நாங்கள் பொறுமையாக இருப்போம். மந்திரிசபையை அமைக்காவிட்டால் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுப்போம். மழை வெள்ளத்தால் ரூ.1 லட்சம் கோடி அளவுக்கு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.

இவ்வாறு உக்ரப்பா கூறினார். 

தொடர்புடைய செய்திகள்

1. அயோத்தி வழக்கில் தீர்ப்பு: ஜனநாயகம், அரசியல் சாசனத்தின் வெற்றி ; முதல்-மந்திரி எடியூரப்பா கருத்து
அயோத்தி வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு வழங்கியுள்ள தீர்ப்பு ஜனநாயகம், அரசியல் சாசனத்தின் வெற்றி என்று முதல்-மந்திரி எடியூரப்பா கருத்து தெரிவித்து உள்ளார்.
2. அயோத்தி வழக்கில் இன்று தீர்ப்பு: போலீஸ் அதிகாரிகளுக்கு முதல்-மந்திரி எடியூரப்பா உத்தரவு
அயோத்தி ராமஜென்மபூமி வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் இன்று (சனிக்கிழமை) தீர்ப்பு வெளியாகிறது. இதையொட்டி போலீஸ் உயர் அதிகாரிகளை செல்போனில் தொடர்பு கொண்டு முதல்-மந்திரி எடியூரப்பா ஆலோசனை நடத்தினார்.
3. கனகபுராவில் மருத்துவ கல்லூரி தொடங்கப்படும்; முதல்-மந்திரி எடியூரப்பா அறிவிப்பு
கனகபுராவில் மருத்துவ கல்லூரி தொடங்கப்படும் என்று முதல்-மந்திரி எடியூரப்பா அறிவித்துள்ளார்.
4. கர்நாடகத்தில் மின் பற்றாக்குறை? எடியூரப்பா பேட்டி
முதல்-மந்திரி எடியூரப்பா நேற்று ஹாவேரி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்தார். அப்போது அவர் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
5. பெங்களூருவுக்கு மேலும் 6 ஆயிரம் பஸ்கள்; முதல்-மந்திரி எடியூரப்பா அறிவிப்பு
பெங்களூரு நகரில் போக்குவரத்து வசதியை மேம்படுத்தும் நடவடிக்கையாக மேலும் 6 ஆயிரம் பஸ்கள் இயக்கப்படும் என்று முதல்-மந்திரி எடியூரப்பா அறிவித்தார்.