மாவட்ட செய்திகள்

பெங்களூரு மானேக்‌ஷா மைதானத்தில் நாளை சுதந்திரதின விழா; எடியூரப்பா தேசிய கொடி ஏற்றுகிறார் + "||" + Independence Day tomorrow at Manekshaw Ground, Bangalore; Yeddyurappa flies the national flag

பெங்களூரு மானேக்‌ஷா மைதானத்தில் நாளை சுதந்திரதின விழா; எடியூரப்பா தேசிய கொடி ஏற்றுகிறார்

பெங்களூரு மானேக்‌ஷா மைதானத்தில் நாளை சுதந்திரதின விழா; எடியூரப்பா தேசிய கொடி ஏற்றுகிறார்
பெங்களூரு மானேக்‌ஷா மைதானத்தில் நாளை (வியாழக்கிழமை) நடைபெறும் சுதந்திரதின விழாவில் முதல்-மந்திரி எடியூரப்பா கலந்து கொண்டு தேசிய கொடி ஏற்றுகிறார். சுதந்திரதின விழாவையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
பெங்களூரு, 

சுதந்திர தின விழா நாளை (வியாழக்கிழமை) நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

பெங்களூருவில் மாநகராட்சி சார்பில் மானேக்‌ஷா மைதானத்தில் சுதந்திரதின விழா கொண்டாடப்படுகிறது. இதுகுறித்து மாநகராட்சி கமிஷனர் மஞ்சுநாத் பிரசாத் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

பெங்களூரு மாநகராட்சி சார்பில் சுதந்திர தின விழா 15-ந் தேதி (நாளை) மானேக்‌ஷா அணிவகுப்பு மைதானத்தில் நடக்கிறது. காலை 9 மணிக்கு முதல்-மந்திரி எடியூரப்பா தேசிய கொடி ஏற்றுகிறார். அதன் பிறகு அவர் போலீசாரின் அணிவகுப்பை பார்வையிடுகிறார். பின்னர் அவர் சுதந்திர தின உரையாற்றுகிறார்.

இந்த உரைக்கு பிறகு அணிவகுப்பு நடைபெறுகிறது. அணிவகுப்பு மரியாதையை முதல்-மந்திரி ஏற்றுக்கொள்கிறார். இது முடிந்த பிறகு பல்வேறு பள்ளி குழந்தைகளின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. இதில் நாட்டுப்பற்றை பறைசாற்றும் பாடல்களுக்கு குழந்தைகள் நடனமாட உள்ளனர். இதில் 1,250 குழந்தைகள் பங்கேற்கின்றன. நிகழ்ச்சியின் இறுதியில் சிறந்த குழுக்களுக்கு பரிசுகள் வழங்கப்பட இருக்கின்றன.

இந்த நிகழ்ச்சியில் பொதுமக்களின் வசதிக்காக 11 ஆயிரத்து 500 இருக்கைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அவர்களுக்கு சிறிய அளவில் குடிநீர், சிற்றுண்டி வசதியும் செய்யப்பட்டுள்ளது. கடந்த 10 நாட்களாக இந்த மைதானத்தை விழாவுக்கு தயார்படுத்தி வருகிறோம். பாதுகாப்பு ஏற்பாடுகளும் தொடங்கப்பட்டுவிட்டன.

ஜாலியன் வாலாபாக் சம்பவத்தை சித்தரிக்கும் நிகழ்ச்சியும் இடம் பெறுகிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக மைதானத்தை சுற்றிலும் 50-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அதிக எண்ணிக்கையில் ஆம்புலன்ஸ் வாகனங்கள் தயாராக நிறுத்தப்படும். தீயணைப்பு வாகனங்களும் நிறுத்தப்பட இருக்கிறது. அணிவகுப்பில் 34 குழுக்கள் இடம் பெறுகின்றன. இதில் மொத்தமாக 1,130 பேர் பங்கேற்கிறார்கள்.

இவ்வாறு மஞ்சுநாத் பிரசாத் கூறினார்.

சுதந்திரதின விழாவையொட்டி எடுக்கப்பட்டு உள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து பெங்களூரு மாநகர போலீஸ் கமிஷனர் பாஸ்கர்ராவ் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

பெங்களூருவில் சுதந்திர தின விழா கொண்டாட்டத்தை அசம்பாவித சம்பவங்கள் இன்றி அமைதியாக கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான முன்னெச்சரிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. சுதந்திர தினத்தன்று பெங்களூருவில் 2 கூடுதல் போலீஸ் கமிஷனர்கள், 11 துணை போலீஸ் கமிஷனர்கள், 23 உதவி போலீஸ் கமிஷனர்கள், 78 இன்ஸ்பெக்டர்கள், 175 சப்-இன்ஸ்பெக்டர்கள், 221 உதவி சப்-இன்ஸ்பெக்டர்கள், ஏட்டுகள்-போலீஸ்காரர்கள் என்று 1,108 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.

இதுதவிர 77 பெண் போலீசாரும், சாதாரண உடையில் 150 போலீஸ்காரர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். மொத்தம் 1,906 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். கர்நாடக ரிசர்வ் போலீஸ் படையினர், நகர ஆயுதப்படையினர், அதிரடிபடையினர், விரைவுப்படையினரும் போலீசாருடன் சேர்ந்து பாதுகாப்பு பணி செய்ய உள்ளனர். மத்திய உளவுத்துறை எச்சரிக்கையை தொடர்ந்து பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. பாதுகாப்பு பணியில் ஈடுபடுபவர்கள் 24 பிரிவாக பிரிந்து பணி செய்ய உள்ளனர்.

மேலும் மைதானத்தை சுற்றி 50 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன. முழு சோதனைக்கு பிறகே பொதுமக்கள் மைதானத்துக்குள் அனுமதிக்கப்பட உள்ளனர். சுதந்திர தின கொண்டாட்டத்தை காண வரும் பொதுமக்கள் மதுபானம், போதைப்பொருட்கள், கேமரா, வெடிப்பொருட்கள், கருப்பு கொடி உள்பட அனைத்து வகையான கொடிகளும் எடுத்து செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. மைதானத்தில் ‘செல்பி‘ எடுக்கவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.

இந்த முறை கோவா போலீசாரும் அணிவகுப்பில் கலந்து கொள்ள உள்ளனர். கர்நாடகத்தை சேர்ந்த போலீசார் மராட்டியம் மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் நடைபெறும் அணிவகுப்பில் கலந்து கொள்ள உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

கர்நாடகத்தில் தற்போது மழை வெள்ள சேதம் ஏற்பட்டு உள்ளதால் இந்த ஆண்டு சுதந்திரதின விழாவை எளிமையாக கொண்டாட அரசு முடிவு செய்து உள்ளது. தற்போது முதல்-மந்திரி மட்டுமே உள்ளார். மந்திரிகள் யாரும் பதவி ஏற்காத நிலையில் மாவட்டங்களில் உயர் அதிகாரிகள் தேசிய கொடி ஏற்ற அரசு சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. வழக்கமாக மாவட்டங்களில் மந்திரிகள் தேசிய கொடி ஏற்றுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

1. உளவுத்துறை எச்சரிக்கையால் போலீஸ் பாதுகாப்பு: பொதுமக்கள் பீதி அடைய வேண்டாம் - முதல்-மந்திரி எடியூரப்பா வேண்டுகோள்
உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளதை தொடர்ந்து பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது என்றும், எனவே பொதுமக்கள் பீதி அடைய வேண்டாம் என்றும் முதல்-மந்திரி எடியூரப்பா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
2. கர்நாடக அரசு சார்பில் விவசாயிகள் ஒரு லட்சம் பேருக்கு தலா ரூ.2 ஆயிரம்; திட்டத்தை எடியூரப்பா தொடங்கி வைத்தார்
பிரதமரின் கிசான் சம்மான் திட்டத்தின் கீழ் கர்நாடக அரசு சார்பில் கூடுதல் நிதி வழங்கும் திட்டத்தை முதல்-மந்திரி எடியூரப்பா நேற்று தொடங்கி வைத்தார். இதன்படி ஒரு லட்சம் விவசாயிகளுக்கு முதல் கட்டமாக தலா ரூ.2 ஆயிரம் வீதம் அவர்களின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டு உள்ளது.
3. 18 நாட்களாக மந்திரிகள் இல்லை: எடியூரப்பா அரசை ‘டிஸ்மிஸ்’ செய்ய வேண்டும்; கவர்னருக்கு காங்கிரஸ் வலியுறுத்தல்
18 நாட்களாக மந்திரிகள் இல்லாததால் எடியூரப்பா அரசை ‘டிஸ்மிஸ்‘ செய்ய வேண்டும் என்று கவர்னருக்கு காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.
4. கர்நாடகத்தில் மழை வெள்ள பாதிப்பு; வீடுகளை இழந்தவர்களுக்கு புதிதாக வீடு கட்டுவதற்கு ரூ.5 லட்சம் : முதல்-மந்திரி அறிவிப்பு
கர்நாடகத்தில் மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு வீடுகளை இழந்தவர் களுக்கு புதிதாக வீடு கட்டுவதற்கு ரூ.5 லட்சம் உதவித்தொகை வழங்கப்படும் என்று முதல்-மந்திரி எடியூரப்பா அறிவித்தார்.
5. நிவாரண நிதியை மத்திய அரசு விரைவில் வழங்கும்: முதல்-மந்திரி எடியூரப்பா நம்பிக்கை
பாதிக்கப்பட்ட மக்களுடன் அரசு உள்ளதாகவும், அதனால் அவர்கள் கவலைப்பட வேண்டாம் என்றும், கூடிய விரைவில் மத்திய அரசு நிவாரண நிதி வழங்கும் என்ற நம்பிக்கை இருப்பதாக முதல்-மந்திரி எடியூரப்பா தெரிவித் துள்ளார்.