மாவட்ட செய்திகள்

பணியை நிறைவு செய்துவிட்டு ஊர் திரும்பியராணுவ வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளித்த மக்கள்கோலாரில் ருசிகரம் + "||" + Returning to town after completing the task People who gave a warm welcome to the soldiers

பணியை நிறைவு செய்துவிட்டு ஊர் திரும்பியராணுவ வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளித்த மக்கள்கோலாரில் ருசிகரம்

பணியை நிறைவு செய்துவிட்டு ஊர் திரும்பியராணுவ வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளித்த மக்கள்கோலாரில் ருசிகரம்
பணியை நிறைவு செய்துவிட்டு திரும்பி வந்த ராணுவ வீரர்களுக்கு மக்கள் உற்சாக வரவேற்பு அளித்த ருசிகர சம்பவம் கோலாரில் நடந்துள்ளது.
கோலார் தங்கவயல்,

பணியை நிறைவு செய்துவிட்டு திரும்பி வந்த ராணுவ வீரர்களுக்கு மக்கள் உற்சாக வரவேற்பு அளித்த ருசிகர சம்பவம் கோலாரில் நடந்துள்ளது.

ராணுவ வீரர்கள்

இந்திய ராணுவத்தில் 22 ஆண்டுகள் பணியாற்றிவிட்டு, பணியை நிறைவு செய்துவிட்டு சொந்த ஊருக்கு திரும்பிய 2 ராணுவ வீரர்களுக்கு மக்கள் உற்சாக வரவேற்பு அளித்த சம்பவம் கோலாரில் நடந்துள்ளது. அதுபற்றிய விவரம் பின்வருமாறு:-

கோலார் தாலுகா தன்டாலா கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணே கவுடா. அதேபோல மிட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் அங்கினப்பா. இவர்கள் 2 பேரும் இந்திய ராணுவத்தில் கடந்த 22 ஆண்டுகளாக பணியாற்றி வந்தனர். அவர்கள் 22 ஆண்டுகளாக நாட்டின் பல்வேறு எல்லைப்பகுதியில் தங்கள் உயிரை பணயம் வைத்து பணியாற்றி வந்தனர். தற்போது அவர்கள் 2 பேரும் பணியை நிறைவு செய்துவிட்டு தங்களது சொந்த ஊருக்கு திரும்பி வந்தனர்.

உற்சாக வரவேற்பு

நாட்டு மக்களுக்காக எல்லையில் தங்களது உயிரை பணயம் வைத்து பணியாற்றிவிட்டு தங்களது சொந்த ஊரான கோலாருக்கு திரும்பி வந்த 2 ராணுவ வீரர்களுக்கு மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அவர்களுக்கு மக்கள் மாலை அணிவித்தும், ஆரத்தி எடுத்தும் வரவேற்றனர். பின்னர் அவர்கள் 2 பேரையும் திறந்த வேனில் ஊர்வலமாக அழைத்து சென்று கவுரவப்படுத்தினார்கள்.

எல்லையில் பணியாற்றிவிட்டு சொந்த ஊருக்கு திரும்பி ராணுவ வீரர்களுக்கு மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தது அந்தப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.