மாவட்ட செய்திகள்

எதிர்க்கட்சி தலைவர் பதவி யாருக்கு? கர்நாடக காங்கிரஸ் தலைவர்களுடன் ஆலோசிக்க சோனியா காந்தி முடிவு + "||" + Who is the Leader of the Opposition? Consult with Karnataka Congress leaders By Sonia Gandhi

எதிர்க்கட்சி தலைவர் பதவி யாருக்கு? கர்நாடக காங்கிரஸ் தலைவர்களுடன் ஆலோசிக்க சோனியா காந்தி முடிவு

எதிர்க்கட்சி தலைவர் பதவி யாருக்கு? கர்நாடக காங்கிரஸ் தலைவர்களுடன் ஆலோசிக்க சோனியா காந்தி முடிவு
எதிர்க்கட்சி தலைவர் பதவி யாருக்கு வழங்கலாம் என்பது குறித்து கர்நாடக காங்கிரஸ் தலைவர்களுடன் ஆலோசிக்க சோனியா காந்தி முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
பெங்களூரு,

கர்நாடகத்தில் குமாரசாமி தலைமையில் நடைபெற்ற காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி அரசு கவிழ்ந்தது. இதையடுத்து எடியூரப்பா தலைமையில் பா.ஜனதா ஆட்சி அமைந்தது. இந்த அரசு அமைந்து சுமார் 3 மாதங்கள் ஆகின்றன. தற்போது கர்நாடக சட்டசபையில் பிரதான எதிர்க்கட்சியாக காங்கிரஸ் உள்ளது. அக்கட்சி இன்னும் எதிர்க்கட்சி தலைவரை நியமிக்கவில்லை.


எதிர்க்கட்சி தலைவர் பதவியை தனக்கு வழங்க வேண்டும் என்று முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா கேட்டுள்ளார். ஆனால் அந்த பதவிக்கு காங்கிரசில் போட்டி எழுந்துள்ளது. முன்னாள் துணை முதல்-மந்திரி பரமேஸ்வர் எம்.எல்.ஏ., மூத்த தலைவர்களில் ஒருவரான எச்.கே.பட்டீல் எம்.எல்.ஏ. ஆகியோரும், எதிர்க்கட்சி தலைவர் பதவியை வழங்குமாறு கேட்டுள்ளனர்.

இதையடுத்து அகில இந்திய காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி, கர்நாடக காங்கிரசில் உள்ள மூத்த தலைவர்களின் கருத்துகளை கேட்டறிய அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் மதுசூதன் மிஸ்திரியை பெங்களூருவுக்கு அனுப்பினார். அவர் கடந்த 6-ந் தேதி பெங்களூருவில் சுமார் 60 நிர்வாகிகளை நேரில் அழைத்து, தனித்தனியாக கருத்து கேட்டார். எதிர்க்கட்சி தலைவர் பதவி யாருக்கு வழங்கலாம், மாநில காங்கிரஸ் தலைவரை மாற்றலாமா? என்பது குறித்தும் கருத்துகளை அவர் கேட்டறிந்தார்.

பின்னர் மதுசூதன் மிஸ்திரி டெல்லிக்கு சென்று, எதிர்க் கட்சி தலைவர் பதவி யாருக்கு வழங்கலாம் என்பது குறித்து தலைவர்களின் கருத்துகளுடன் அறிக்கை ஒன்றை சோனியா காந்தியிடம் தாக்கல் செய்தார். அதன் அடிப்படையில், கர்நாடக காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ், முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா, முன்னாள் துணை முதல்-மந்திரி பரமேஸ்வர் உள்ளிட்ட தலைவர்களை டெல்லிக்கு அழைத்து, ஆலோசனை நடத்த சோனியா காந்தி முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

மாநில காங்கிரஸ் தலைவராக உள்ள தினேஷ் குண்டுராவ், சித்தராமையாவின் சொல்படி நடந்து கொள்வதாகவும், அதனால் எதிர்க்கட்சி தலைவர் பதவியை சித்த ராமையாவுக்கு வழங்கினால், பிற தலைவர்கள் புறக் கணிக்கப்படுவார்கள் என்றும், அதனால் அந்த இரண்டில் ஒரு பதவியை மற்றவர்களுக்கு வழங்க வேண்டும் என்றும் முக்கிய தலைவர்களான மல்லிகார்ஜுன கார்கே, பரமேஸ்வர், கே.எச்.முனியப்பா, பி.கே.ஹரி பிரசாத் உள்ளிட்டோர் காங்கிரஸ் மேலிடத்திடம் கருத்துகளை தெரிவித்துள்ளனர்.