மாவட்ட செய்திகள்

சிவமொக்காவில் பொதுமக்கள், குப்பை கழிவுகளை தரம் பிரித்து கொட்ட வேண்டும்; கலெக்டர் சிவக்குமார் வேண்டுகோள் + "||" + The public in Sivamoka,The quality of garbage wastes To shed

சிவமொக்காவில் பொதுமக்கள், குப்பை கழிவுகளை தரம் பிரித்து கொட்ட வேண்டும்; கலெக்டர் சிவக்குமார் வேண்டுகோள்

சிவமொக்காவில் பொதுமக்கள், குப்பை கழிவுகளை தரம் பிரித்து கொட்ட வேண்டும்; கலெக்டர் சிவக்குமார் வேண்டுகோள்
சிவமொக்காவில், பொதுமக்கள் குப்பை கழிவுகளை தரம் பிரித்து கொட்ட வேண்டும் என்று கலெக்டர் சிவக்குமார் கூறினார்.
சிவமொக்கா,

சிவமொக்கா மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பிளாஸ்டிக் ஒழிப்பு தொடர்பான ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் சிவக்குமார் தலைமை தாங்கினார். கூட்டத்தில் மாவட்ட பஞ்சாயத்து முதன்மை செயல் அதிகாரி வைஷாலி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாந்தராஜ் உள்பட அனைத்துதுறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர். கூட்டம் முடிந்த பிறகு கலெக்டர் சிவக்குமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பொதுமக்கள் தங்கள் வீடுகளில் உள்ள குப்பை கழிவுகளை தரம் பிரித்து கொட்ட வேண்டும். அப்போதுதான் முழுமையாக குப்பை கழிவுகளை அப்புறப்படுத்த முடியும். இதுதொடர்பாக நான் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு இருக்கிறேன். மேலும் மாவட்டத்தில் பிளாஸ்டிக் மற்றும் பாலிதீன் பைகள் ஒழிப்பை திறம்பட செயல்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். வீடுகளிலும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள், பாலிதீன் பைகள் இருக்கக் கூடாது. அவற்றையும் கண்டறியும்படி அதிகாரிகளிடம் அறிவுறுத்தி உள்ளேன்.

பிளாஸ்டிக் மற்றும் பாலிதீன் பைகள் ஒழிப்பில் இனியும் அதிகாரிகள் அக்கறை இல்லாமல் இருக்கக்கூடாது. தொடர் மழை காரணமாக சிவமொக்காவில் பொதுமக்களும், விவசாயிகளும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். முற்றிலும் நிலைகுலைந்துள்ள மாவட்டத்தை சீரமைக்க வேண்டியது மாவட்ட நிர்வாகத்தின் பொறுப்பு. தற்போது நிவாரண பணிகளை மேற்கொள்வதில் கவனம் செலுத்தி வருகிறோம்.

சிவமொக்கா மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 300 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் பாலிதீன் பைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ஆனால் பத்ராவதி நகராட்சி சார்பில் 10 டன் பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் பாலிதீன் பைகள் பறிமுதல் செய்யப்பட்டு இருக்கிறது. அதேபோல் மற்ற நகராட்சி அமைப்புகளும் பல டன்கள் கணக்கில் பிளாஸ்டி மற்றும் பாலிதீன் பைகளை கைப்பற்றி உள்ளன. ஆனால் சிவமொக்கா மாநகராட்சி மட்டும் இதில் பின்தங்கி இருக்கிறது. இதுதொடர்பாக விளக்கம் கேட்டு மாநகராட்சி ஆணையருக்கு நோட்டீசு அனுப்பப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.