மாவட்ட செய்திகள்

சுதந்திர காஷ்மீர் பதாைகயுடன் போராட்டத்தில் கலந்துகொண்டகல்லூரி மாணவி ஆருத்ராவுக்கு ஜாமீன்பெங்களூரு சிட்டி சிவில் கோர்ட்டு உத்தரவு + "||" + College student Arudra gets bail Bengaluru City Civil Court Order

சுதந்திர காஷ்மீர் பதாைகயுடன் போராட்டத்தில் கலந்துகொண்டகல்லூரி மாணவி ஆருத்ராவுக்கு ஜாமீன்பெங்களூரு சிட்டி சிவில் கோர்ட்டு உத்தரவு

சுதந்திர காஷ்மீர் பதாைகயுடன் போராட்டத்தில் கலந்துகொண்டகல்லூரி மாணவி ஆருத்ராவுக்கு ஜாமீன்பெங்களூரு சிட்டி சிவில் கோர்ட்டு உத்தரவு
சுதந்திர காஷ்மீர் பதாகையுடன் போராட்டத்தில் கலந்துகொண்ட கல்லூரி மாணவி ஆருத்ராவுக்கு ஜாமீன்.
பெங்களூரு, 

சுதந்திர காஷ்மீர் பதாகையுடன் போராட்டத்தில் கலந்துகொண்ட கல்லூரி மாணவி ஆருத்ராவுக்கு ஜாமீன் வழங்கி ெபங்களூரு சிட்டி சிவில் கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.

பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷம்

மத்திய அரசு அமல்படுத்தி உள்ள குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து கடந்த 40 நாட்களுக்கு முன்பு பெங்களூரு டவுன்ஹாலில் பல்வேறு அமைப்பினர் சார்பில் போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட சிக்கமகளூரு மாவட்டம் மூடிகெரேயை சேர்ந்த கல்லூரி மாணவியான அமுல்யா என்பவர் பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷம் எழுப்பினார்.

இதையடுத்து அவர் டவுன்ஹாலில் இருந்து வெளியேற்றப்பட்டார். இந்த நிலையில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷம் எழுப்பியதாக கூறி ேதசத்துரோக வழக்கில் அமுல்யாவை போலீசார் கைது செய்து பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைத்து இருந்தனர்.

ஜாமீன் வழங்கி உத்தரவு

இந்த நிலையில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷம் எழுப்பிய அமுல்யாவை கண்டித்து டவுன்ஹாலில் போராட்டம் நடந்தது. அப்போது அந்த போராட்டத்தில் கலந்து கொண்ட ஒரு இளம்பெண் சுதந்திர காஷ்மீர் என்ற பதாகையை கையில் ஏந்தி இருந்தார். இதையடுத்து அவரையும் தேசத்துரோக வழக்கில் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்து இருந்தார்கள். போலீசார் நடத்திய விசாரணையில் அந்த இளம்பெண்ணின் பெயர் ஆருத்ரா(வயது 24), என்பதும் கல்லூரி மாணவியான ஆருத்ராவும், அமுல்யாவும் தோழிகள் என்பதும் தெரிந்தது. மேலும் அமுல்யா கைது செய்யப்பட்டதை கண்டித்து ஆருத்ரா சுதந்திர காஷ்மீர் பதாகையை கையில் ஏந்தி வந்ததும் ெதரியவந்தது.

இந்த நிலையில் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த ஆருத்ரா தனக்கு ஜாமீன் வழங்க கோரி பெங்களூரு 55-வது கூடுதல் சிட்டி சிவில் கோர்ட்டில் மனுதாக்கல் செய்து இருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி நாராயண பிரசாத், ஆருத்ராவுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.