மாவட்ட செய்திகள்

3 ஐ.பி.எஸ் அதிகாரிகள் இடமாற்றம் பெங்களூரு மாநகர புதிய போலீஸ் கமிஷனராக கமல்பந்த் நியமனம் + "||" + 3 IPS officers transferred Kamal Pandit appointed as new Bangalore Municipal Commissioner of Police

3 ஐ.பி.எஸ் அதிகாரிகள் இடமாற்றம் பெங்களூரு மாநகர புதிய போலீஸ் கமிஷனராக கமல்பந்த் நியமனம்

3 ஐ.பி.எஸ் அதிகாரிகள் இடமாற்றம் பெங்களூரு மாநகர புதிய போலீஸ் கமிஷனராக கமல்பந்த் நியமனம்
கர்நாடகத்தில் நேற்று 3 ஐ.பி.எஸ். அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர். பெங்களூரு போலீஸ் கமிஷனராக இருந்த பாஸ்கர்ராவை இடமாற்றம் செய்ததுடன், புதிய கமிஷனராக கமல்பந்தை நியமித்து அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
பெங்களூரு,

பெங்களூரு மாநகர போலீஸ் கமிஷனராக இருந்து வந்தவர் பாஸ்கர்ராவ். இவர், கர்நாடகத்தில் பா.ஜனதா ஆட்சிக்கு வந்ததும் போலீஸ் கமிஷனராக இருந்த அலோக்குமாரை இடமாற்றம் செய்துவிட்டு புதிய கமிஷனராக நியமிக்கப்பட்டு இருந்தார். நாளையுடன் (ஞாயிற்றுக்கிழமை) போலீஸ் கமிஷனராக பாஸ்கர்ராவ் பதவி ஏற்று ஒரு ஆண்டை நிறைவு செய்வதாக இருந்தது. அதே நேரத்தில் பாஸ்கர்ராவை பணி இடமாற்றம் செய்துவிட்டு புதிய போலீஸ் கமிஷனராக கமல்பந்தை நியமிக்கவும் அரசு திட்டமிட்டு வந்ததாக கூறப்பட்டது.


அதன்படி, போலீஸ் கமிஷனர் பாஸ்கர்ராவ் நேற்று அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக புதிய போலீஸ் கமிஷனராக கமல்பந்தை நியமித்து கர்நாடக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. கர்நாடகத்தில் நேற்று 3 மூத்த ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணி இடமாற்றம் செய்யப்பட்டனர்.

போலீஸ் கமிஷனராககமல்பந்த் நியமனம்

அதாவது கர்நாடக மாநில உளவுப்பிரிவு கூடுதல் போலீஸ் டி.ஜி.பி.யாக பணியாற்றி வந்த கமல்பந்த், அதில் இருந்து மாற்றப்பட்டு பெங்களூரு மாநகர போலீஸ் கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார். பெங்களூரு மாநகர போலீஸ் கமிஷனராக இருந்த பாஸ்கர்ராவ், உள்நாட்டு பாதுகாப்பு கூடுதல் போலீஸ் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் கர்நாடக மாநில உளவுப்பிரிவு கூடுதல் போலீஸ் டி.ஜி.பி.யாக தயானந்தை நியமித்து கர்நாடக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

பெங்களூரு போலீஸ் கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ள கமல்பந்த் 1990-ம் ஆண்டு பேட்ஜ் ஐ.பி.எஸ். அதிகாரி ஆவார். ஏற்கனவே பெங்களூருவில் சட்டம்-ஒழுங்கு கூடுதல் போலீஸ் கமிஷனராக பணியாற்றிய அனுபவம் கமல்பந்திற்கு உள்ளது. பெங்களூரு புதிய போலீஸ் கமிஷனர் கமல்பந்திற்கு உயர் போலீஸ் அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. சுருக்குமடி வலையை பயன்படுத்தி பிடிக்கப்பட்ட மீன்கள் ரூ.6½ லட்சத்துக்கு ஏலம் அதிகாரிகள் நடவடிக்கை
நாகையில் சுருக்குமடி வலையை பயன்படுத்தி பிடிக்கப்பட்ட மீன்களை அதிகாரிகள் ரூ.6½ லட்சத்துக்கு ஏலம் விட்டனர்.
2. ராயக்கோட்டை தக்காளி மார்க்கெட்டில் சமூக இடைவெளியை கடைபிடிக்காத கடைக்கு ‘சீல்’ அதிகாரிகள் நடவடிக்கை
ராயக்கோட்டையில் தக்காளி மார்க்கெட்டில் சமூக இடைவெளியை கடைபிடிக்காத கடைக்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர்.
3. சுகாதார பணியாளர்களுக்கு தொற்று எதிரொலி: ஆரல்வாய்மொழியில் பாதுகாப்பு வசதிகளுடன் சோதனைச்சாவடி அதிகாரிகள் நடவடிக்கை
சுகாதார பணியாளர்களுக்கு தொற்று ஏற்பட்டதை தொடர்ந்து, பாதுகாப்பு வசதிகளுடன் ஆரல்வாய்மொழி சோதனைச்சாவடி அமைக்கப்பட்டு வருகிறது.
4. அதிகாரிகள், மருத்துவ குழுவினரின் சிறப்பான பணியால் திருச்சி மாவட்டத்தில் கொரோனா கட்டுக்குள் உள்ளது அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் பேச்சு
திருச்சி ரோட்டரி சங்கங்களின் சார்பில் ரூ.28 லட்சம் மதிப்பில் அரசு மருத்துவமனைக்கு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி தென்னூர் உழவர் சந்தை அருகே உள்ள ரோட்டரி அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.
5. திருப்பூர், சேவூரில் விதிகளை மீறி செயல்பட்ட 6 கடைகளுக்கு ‘சீல்’ அதிகாரிகள் நடவடிக்கை
திருப்பூர் மற்றும் சேவூர் பகுதியில் விதிகளை மீறி செயல்பட்ட 6 கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.