தேசிய செய்திகள்

கர்நாடக மந்திரிசபை விரிவாக்கம்: 7 புதிய மந்திரிகள் பதவி ஏற்று கொண்டனர் + "||" + Karnataka CM BS Yediyurappa expands cabinet, 7 new ministers sworn-in

கர்நாடக மந்திரிசபை விரிவாக்கம்: 7 புதிய மந்திரிகள் பதவி ஏற்று கொண்டனர்

கர்நாடக மந்திரிசபை விரிவாக்கம்: 7 புதிய மந்திரிகள் பதவி ஏற்று கொண்டனர்
கர்நாடகத்தில் அமைச்சரவை விரிவாக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் புதிதாக 7 அமைச்சர்கள் புதன்கிழமை பதவியேற்றுக் கொண்டனர்.
பெங்களூரு

கர்நாடக மந்திரிசபையில் காலியாக உள்ள 7 இடங்களை நிரப்ப பா.ஜனதா மேலிடம் அனுமதி வழங்கியுள்ளது.

இதையடுத்து கர்நாடக மந்திாிசபையை விரிவாக்கம் செய்ய முதல்-மந்திரி எடியூரப்பா முடிவு செய்தார். அதனை நேற்று அதிகாரபூர்வமாக் அறிவித்தார்.

இந்த நிலையில் இன்று பிற்பகல் கவர்னர் மாளிகையில் எம்.டி.பி.நாகராஜ், உமேஷ் கட்டி, அரவிந்த் லிம்பாவலி, முருகேஷ் நிரணி, ஆர்.சங்கர், சிபி யோகேஸ்வர், அங்காரா எஸ் ஆகிய 7 பேருக்கு கர்நாடக கவர்னர்  வாஜுபாய் வாலா பதவி பிரமாணம் செய்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் கர்நாடக முதல்வர் எடியூரப்பாவும் கலந்து கொண்டார்.

குமாரசாமி தலைமையிலான காங்கிரஸ்-ஜனதா தளம் (எஸ்) கூட்டணி அரசு 14 மாதங்களில் கவிழ்ந்தது. அதன் பிறகு முதல்-மந்திரியாக எடியூரப்பா கடந்த 2019-ம் ஆண்டு ஜூலை மாதம் 26-ந் தேதி பதவி ஏற்றார். அப்போது அவர் ஒருவர் மட்டுமே பதவி ஏற்றார். அதைத்தொடர்ந்து 3 வாரங்களுக்கு பிறகு அதே ஆண்டு ஆகஸ்டு மாதம் 20-ந் தேதி 17 மந்திரிகள் நியமிக்கப்பட்டனர். இதில் ஒரு பெண் மந்திரியும் அடங்குவார்.

பிறகு கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற சட்டசபை இடைத்தேர்தலுக்கு பிறகு மந்திரிசபை விரிவாக்கம் செய்யப்பட்டது. அதாவது கடந்த 2020-ம் ஆண்டு பிப்ரவரி 6-ந் தேதி நடைபெற்ற மந்திரிசபை விரிவாக்கத்தின்போது, புதிதாக 10 மந்திரிகள் பதவி ஏற்றனர். இவர்கள் அனைவரும் இடைத்தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் என்பதும், இவர்கள் காங்கிரஸ், ஜனதா தளம் (எஸ்) கட்சிகளில் இருந்து வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் 4-வது முறையாக தற்போது மந்திரிசபை விரிவாக்கம் செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


தொடர்புடைய செய்திகள்

1. கர்நாடகாவில் போக்குவரத்து விதிமீறலுக்கான அபராத தொகையை செலுத்த முடியாததால் தாலி சங்கிலியை கழற்றி கொடுத்த பெண்
போக்குவரத்து விதிமீறலுக்கான அபராத தொகையை செலுத்த முடியாததால் தனது தாலிசங்கிலியை கழற்றி போக்குவரத்து போலீசாரிடம் பெண் கொடுத்த வினோத சம்பவம் பெலகாவியில் அரங்கேறி உள்ளது.
2. கர்நாடகாவில் மேலும் 571- பேருக்கு கொரோனா தொற்று
கர்நாடகாவில் 571- பெருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
3. கர்நாடகாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து லாரிகள் இன்று வேலை நிறுத்தம்
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து கர்நாடகத்தில் இன்று லாரிகள் வேலை நிறுத்தம் நடைபெற உள்ளது.
4. கர்நாடகாவில் நேற்று புதிதாக 453 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி - மாநில சுகாதாரத்துறை
கர்நாடகாவில் நேற்று புதிதாக 453 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
5. கர்நாடகா கல்குவாரி வெடிவிபத்தில் 6 பேர் உயிரிழப்பு - விசாரணை நடத்த முதல்வர் எடியூரப்பா உத்தரவு
கர்நாடக மாநிலத்தில் நேற்று இரவு கல்குவாரியில் வெடிபொருட்கள் வெடித்து சிதறியதில் 6 பேர் உயிரிழந்ததுள்ளனர்.

அதிகம் வாசிக்கப்பட்டவை