மாவட்ட செய்திகள்

பெங்களூருவில் பயங்கரம் கல்லால் தாக்கி வாலிபர் கொலை மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு + "||" + In Bangalore Stoned Murder of a teenager Police webcast for mystics

பெங்களூருவில் பயங்கரம் கல்லால் தாக்கி வாலிபர் கொலை மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பெங்களூருவில் பயங்கரம் கல்லால் தாக்கி வாலிபர் கொலை மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
பெங்களூருவில் கல்லால் தாக்கி வாலிபரை கொலை செய்த பயங்கரம் நடந்துள்ளது. தலைமறைவான மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.
பெங்களூரு, 

பெங்களூரு சேஷாத்திரிபுரம் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட ரெயில்வே பிளாட்பாரம் ரோட்டில் உள்ள ரெயில்வே துறைக்கு சொந்தமான காலி நிலம் உள்ளது. நேற்று முன்தினம் இரவு அந்த காலி நிலத்தில் ஒரு வாலிபர் தலை நசுங்கி நிலையில் ரத்த வெள்ளத்தில் மர்மநபர்களால் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதனை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

இதுபற்றி உடனடியாக அவர் சேஷாத்திரிபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்தி்ற்கு போலீசார் விரைந்து வந்து வாலிபரின் உடலை கைப்பற்றி விசாரித்தனர். அந்த வாலிபருக்கு 25 வயது இருக்கும்.

மேலும் வாலிபரின் தலை நசுங்கி இருந்ததுடன், அவரது மர்மஉறுப்பில் பலத்தகாயங்கள் இருப்பது தெரியவந்தது. அதாவது வாலிபரின் மர்மஉறுப்பில் கல்லால் தாக்கியும், அவரது தலையில் கல்லைப்போட்டும் மர்மநபர்கள் கொலை செய்திருப்பது தெரியவந்தது. அந்த வாலிபரை கொலை செய்த மர்மநபர்கள் யார்? என்ன காரணத்திற்காக கொலை செய்தார்கள்? என்பது தெரியவில்லை. அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக பவுரிங் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

கொலையாளிகளை கைது செய்ய அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை கைப்பற்றி போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். இதுகுறித்து சேஷாத்திரிபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் தலைமறைவாகி விட்ட மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

தொடர்புடைய செய்திகள்

1. பெங்களூருவில் காதலர் தினத்தில் கோலாகலம்; டி.கே.சிவக்குமார் மகள் திருமணம் நடந்தது
பெங்களூருவில் காதலர் தினமான நேற்று கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமாரின் மகள் திருமணம் கோலாகலமாக நடந்தது. அதேபோல் நட்சத்திர ஜோடியான டார்லிங் கிருஷ்ணா - மிலனா நாகராஜ் ஆகியோரும் இல்லற வாழ்க்கையில் இணைந்தனர்.
2. பெங்களூருவில், ஆபாச புகைப்படங்களை வெளியிடுவதாக கூறி கல்லூரி மாணவியிடம் பணம் கேட்டு மிரட்டல்
பெங்களூருவில் ஆபாச படங்களை வெளியிடுவதாக கூறி கல்லூரி மாணவியிடம் பணம் கேட்டு மிரட்டல் விடுத்த 2 வாலிபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.
3. பெங்களூருவில், ரூ.21 ஆயிரத்து 91 கோடியில் வெளிவட்டச்சாலை முதல்-மந்திரி எடியூரப்பா தகவல்
பெங்களூருவில் ரூ.21 ஆயிரத்து 91 கோடி மதிப்பீட்டில் வெளிவட்டச்சாலை அமைக்கப்படும் என்று முதல்-மந்திரி எடியூரப்பா கூறினார்.
4. பெங்களூருவில் 2-வது நாளில் 3,659 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது மாநகராட்சி கமிஷனர் தகவல்
பெங்களூருவில் 2-வது நாளில் 3,659 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டதாக மாநகராட்சி கமிஷனர் கூறினார்.
5. பெங்களூருவில் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி இளம்பெண்களிடம் பண மோசடி மர்மநபரை போலீஸ் தேடுகிறது
பெங்களூருவில் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி இளம்பெண்களிடம் பண மோசடி செய்த வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

அதிகம் வாசிக்கப்பட்டவை