மாவட்ட செய்திகள்

கே.ஜி.எப்.-2 படத்தில் நடிகர் யஷ் புகைப்பிடிக்கும் காட்சியை நீக்க வேண்டும் சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் வேண்டுகோள் + "||" + In the KGF-2 movie Actor Yash The smoking scene should be removed

கே.ஜி.எப்.-2 படத்தில் நடிகர் யஷ் புகைப்பிடிக்கும் காட்சியை நீக்க வேண்டும் சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் வேண்டுகோள்

கே.ஜி.எப்.-2 படத்தில் நடிகர் யஷ் புகைப்பிடிக்கும் காட்சியை நீக்க வேண்டும் சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் வேண்டுகோள்
கே.ஜி.எப்.-2 படத்தில் நடிகர் யஷ் புகைப்பிடிக்கும் காட்சியை நீக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பெங்களூரு, 

கர்நாடக சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் பெங்களூருவில் நேற்று நிருபர்களு்க்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

கர்நாடகத்தில் முதல்கட்டமாக நேற்று முன்தினம் 6.48 லட்சம் டோஸ் கொரோனா தடுப்பூசி வந்தது. மேலும் 20 ஆயிரம் டோஸ் தடுப்பூசி விரைவில் கர்நாடகத்திற்கு வரவுள்ளது. கோவேக்சினின் ஒரு தடுப்பூசி பாட்டிலில் 10 மில்லி தடுப்பூசி திரவம் இருக்கிறது. கோவிஷீல்டு தடுப்பூசி பாட்டிலில் 5 மில்லி திரவம் இருக்கிறது. இது தான் இந்த 2 நிறுவனங்களின் தடுப்பூசிக்கும் இடையே இருக்கும் வித்தியாசம். ஒரு பாட்டில் திரவத்தை பயன்படுத்தி 20 பேருக்கு தடுப்பூசி போட முடியும்.

இந்த 2 நிறுவனங்களின் தடுப்பூசியும் மக்களுக்கு போடப்படும். ஆனால் தடுப்பூசி பெறுபவர்கள், ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தின் தடுப்பூசி தான் வேண்டும் என்று கேட்க முடியாது. தடுப்பூசிகள் அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பப்பட்டு வருகிறது. திட்டமிட்டப்படி வருகிற 16-ந் தேதி தடுப்பூசி போடும் பணி தொடங்கும். புதிய மந்திரிகளுக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். மந்திரி பதவி கிடைக்காதவர்களுக்கு அதிருப்தி ஏற்படுவது சகஜம் தான். இது ஜனநாயகத்தின் ஒரு பாகம்.

பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் யாருக்கும் கோபம் இல்லை. கட்சியில் அனைவரும் ஒற்றுமையாக உள்ளனர். நடிகர் யஷ் பொறுப்பான பணிகளை செய்கிறார். அவர் மீது எனக்கு மரியாதை உள்ளது. அவரது புதிய படமான கே.ஜி.எப்.-2 படத்தில் அவர் சிகரெட் பிடிக்கும் கட்சி வெளியாகியுள்ளது. இந்த காட்சியை நீக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளேன்.

ஏனென்றால் நடிகர்களை ஆயிரக்கணக்கான ரசிகர்கள் பின்பற்றுகிறார்கள். இது அவரது ரசிகர்கள் மீது தாக்கத்தை ஏற்படுத்தும். புகைப்பிடிக்கும் காட்சியை நீக்கினால் அது இந்த சமுதாயத்திற்கு நன்மை பயக்கும் விஷயமாக இருக்கும். அரசின் இந்த கருத்து அனைத்து படங்களுக்கும் பொருந்தும். இவ்வாறு மந்திரி சுதாகர் கூறினார்.