தேசிய செய்திகள்

சாம்ராஜ்நகர் சம்பவத்தில் தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கைஎடியூரப்பா தகவல் + "||" + Strict action against the culprits in the Samrajnagar incident Edyurappa Information

சாம்ராஜ்நகர் சம்பவத்தில் தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கைஎடியூரப்பா தகவல்

சாம்ராஜ்நகர் சம்பவத்தில் தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கைஎடியூரப்பா தகவல்
சாம்ராஜ்நகர் சம்பவத்தில் தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
பெங்களூரு:
முதல்-மந்திரி எடியூரப்பா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது:-
சாம்ராஜ்நகரில் கொரோனா நோயாளிகள் சிலர் திடீரென இறந்து இருப்பது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. இறந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த சம்பவத்தை அரசு தீவிரமாக எடுத்துக் கொண்டுள்ளது. இது குறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யும்படி மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரியை நியமனம் செய்துள்ளேன். இதில் தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இத்தகைய சம்பவம் மீண்டும் நடைபெறாமல் தடுக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
இவ்வாறு எடியூரப்பா தெரிவித்துள்ளார்.