தேசிய செய்திகள்

விமானம் தரையிறங்கிய போது டயர் வெடித்து விபத்து ; பயணிகள் உயிர் தப்பினர் + "||" + IndiGo flight tyre bursts in Hubli during landing, passengers escape unhurt

விமானம் தரையிறங்கிய போது டயர் வெடித்து விபத்து ; பயணிகள் உயிர் தப்பினர்

விமானம் தரையிறங்கிய போது டயர் வெடித்து விபத்து  ; பயணிகள் உயிர் தப்பினர்
ஹூப்ளியில் தரையிறங்கிய போது இண்டிகோ விமானம் டயர் வெடித்து விபத்து ஏற்பட்டது. பயணிகள் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டனர்.
ஹூப்ளி

கண்ணூரில் இருந்து கர்நாடகத்தின் ஹூப்ளிக்குச் சென்ற விமானம் தரையிறங்கும்போது கோளாறு ஏற்பட்டது. எனினும்  விமானியின் சாமர்த்தியத்தால் விமானம் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது.

கேரள மாநிலம் கண்ணூரில் இருந்து புறப்பட்ட இண்டிகோ விமானம் 6 இ -7979, திங்களன்று கர்நாடகத்தின் ஹூப்ளிக்குச் சென்றது. திங்களன்று மாலை கர்நாடகத்தின் ஹூப்ளி விமான நிலையத்தில் தரையிறங்கும்போது திடீரென விமானத்தில் கோளாறு ஏற்பட்டது. எனினும்  விமானியின் சாமர்த்தியத்தால் விமானம் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது. இதை தொடர்ந்து  பயணிகள் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டனர்.

இந்த சம்பவம் குறித்து தற்போது சிவில் ஏவியேஷன் இயக்குநரகம் விசாரணை நடத்தி வருகிறது.

விமானத்தின் டயர் வெடித்ததால் இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள விமான நிறுவனம், பயணிகள், பணியாளர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாகவும் விமானம் தற்போது பராமரிப்பு சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.