மாவட்ட செய்திகள்

டெல்லியில் அமித்ஷாவுடன் கவர்னர் கெலாட் திடீர் சந்திப்பு + "||" + dhavarchand kehlot met amit shah

டெல்லியில் அமித்ஷாவுடன் கவர்னர் கெலாட் திடீர் சந்திப்பு

டெல்லியில் அமித்ஷாவுடன் கவர்னர் கெலாட் திடீர் சந்திப்பு
அமித்ஷாவை, தாவர்சந்த் கெலாட் சந்தித்தார்.
பெங்களூரு: கர்நாடக முதல்-மந்திரி எடியூரப்பா மாற்றப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் மாநில அரசியலில் பரபரப்பு நிலவி வருகிறது. இந்த பரபரப்பான சூழலில் புதிய கவர்னர் தாவர்சந்த் கெலாட், டெல்லியில் நேற்று உள்துறை மந்திரி அமித்ஷாவை நேரில் சந்தித்து பேசினார். 

இந்த சந்திப்பின்போது விவாதிக்கப்பட்ட விஷயங்கள் குறித்த தகவல் எதுவும் வெளியாகவில்லை. ஆனால் முதல்-மந்திரியை மாற்றும் விவகாரம் குறித்து ஆலோசனை நடைபெற்று இருக்கலாம் என்று கூறப்படுகிறது.