மாவட்ட செய்திகள்

மேகதாது திட்டம் குறித்து விவாதிக்க விரைவில் அனைத்துக்கட்சி கூட்டம்; பசவராஜ் பொம்மை பேட்டி + "||" + An all-party meeting will be held soon to discuss the Meghadau project

மேகதாது திட்டம் குறித்து விவாதிக்க விரைவில் அனைத்துக்கட்சி கூட்டம்; பசவராஜ் பொம்மை பேட்டி

மேகதாது திட்டம் குறித்து விவாதிக்க விரைவில் அனைத்துக்கட்சி கூட்டம்; பசவராஜ் பொம்மை பேட்டி
மேகதாது திட்டம் குறித்து விவாதிக்க விரைவில் அனைத்துக்கட்சி கூட்டம் கூட்டப்படும் என்று கர்நாடக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறினார்.
பெங்களூரு:

அனைத்துக்கட்சி கூட்டம்

  காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் ரூ.9 ஆயிரம் கோடியில் புதிய அணை கட்ட கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு தமிழ்நாடு அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்த விஷயத்தில் இரு மாநிலங்களுக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது. இரு மாநிலங்களும் பிரதமரிடம், மேகதாது அணை விவகாரம் குறித்து கோரிக்கை மனு வழங்கியுள்ளன.

  அதாவது கர்நாடகம், மேகதாது திட்டத்திற்கு அனுமதி வழங்குமாறும், தமிழ்நாடு, புதிய அணை கட்ட அனுமதி அளிக்கக்கூடாது என்றும் வலியுறுத்தியுள்ளன. இந்த நிலையில் மேகதாது திட்டம் தொடர்பாக அனைத்துக்கட்சி கூட்டம் கூட்டப்படும் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறியுள்ளார். இதுகுறித்து அவர் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

அனைவரின் கருத்துகள்

  கர்நாடகத்தின் நிலம், நீர் பிரச்சினை வரும்போது அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டி கருத்து கேட்கப்படும். அது போல் மேகதாது திட்ட விஷயத்தில் அனைத்துக்கட்சி கூட்டம் விரைவில் கூட்டப்படும். இந்த பிரச்சினையில் அனைத்துக்கட்சிகளும் ஓரணியில் இருக்கின்றன. அனைவரின் கருத்துகளையும் கேட்டு அதன்படி அரசு செயல்படும். மேகதாது திட்டம் குறித்து குமாரசாமி நடத்திய ஊர்வலம் குறித்து தகவலை அறிந்தேன்.
  இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.