மாவட்ட செய்திகள்

கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பு 600-க்கு கீழ் பதிவு + "||" + In Karnataka corona damage has been reported below 600

கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பு 600-க்கு கீழ் பதிவு

கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பு 600-க்கு கீழ் பதிவு
கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பு 600-க்கு கீழ் பதிவாகி உள்ளது.
பெங்களூரு:

கர்நாடக அரசின் சுகாதாரத்துறை வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

  கர்நாடகத்தில் நேற்று ஒரு லட்சத்து 5 ஆயிரத்து 645 பேருக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில், புதிதாக 559 பேருக்கு பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. மேலும் 12 பேர் இறந்தனர். இதன்மூலம் பாதிப்பு எண்ணிக்கை 29 லட்சத்து 62 ஆயிரத்து 967 ஆகவும், பலி எண்ணிக்கை 37 ஆயிரத்து 529 ஆகவும் உள்ளது. நேற்று 1,034 பேர் டிஸ்சார்ஜ் ஆனார்கள். இதன்மூலம் குணம் அடைந்தோர் எண்ணிக்கை 29 லட்சத்து 9 ஆயிரத்து 656 ஆக உள்ளது. 15 ஆயிரத்து 754 பேர் மருத்துவ சிகிச்சையில் உள்ளனர்.

  பெங்களூரு நகரில் 231 பேர், தட்சிண கன்னடாவில் 87 பேர், உடுப்பியில் 57 பேர், துமகூருவில் 24 பேர் உள்பட 27 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. 3 மாவட்டங்களில் புதிதாக யாரும் பாதிக்கப்படவில்லை. தட்சிண கன்னடாவில் 5 பேர், பெங்களூரு நகரில் 4 பேர், குடகு, உத்தர கன்னடா, சிவமொக்காவில் தலா ஒருவர் இறந்தனர். 25 மாவட்டங்களில் உயிரிழப்பு இல்லை.
  இவ்வாறு சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.