மாவட்ட செய்திகள்

கர்நாடகத்தில் ஒரு லிட்டர் டீசல் ரூ.100-ஐ தாண்டியது + "||" + Diesel price in Karnataka exceeds Rs 100

கர்நாடகத்தில் ஒரு லிட்டர் டீசல் ரூ.100-ஐ தாண்டியது

கர்நாடகத்தில் ஒரு லிட்டர் டீசல் ரூ.100-ஐ தாண்டியது
கர்நாடகத்தில் ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.100-ஐ தாண்டியது.
பெங்களூரு:

நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் கியாஸ் சிலிண்டர்களின் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே செல்கிறது. பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்ந்த வண்ணம் இருக்கிறது. ஏற்கனவே பெங்களூரு உள்பட கர்நாடகத்தில் பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.100-ஐ தாண்டிவிட்டது. தற்போது பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.110-ஐ நோக்கி சென்று கொண்டு இருக்கிறது. 

அதே நேரத்தில் கியாஸ் சிலிண்டர்களின் விலையும் ரூ.900-ஐ தாண்டி உள்ளது. இந்த நிலையில், கடந்த சில நாட்களாக பெங்களூரு உள்பட கர்நாடகத்தில் டீசல் விலையும் தொடர்ந்து உயர்ந்து வண்ணம் இருந்தது.

  இதனால் டீசல் விலையும் ரூ.100-ஐ நெருங்கிய வண்ணம் இருந்தது. இந்த நிலையில், பெட்ரோலை தொடர்ந்து, கர்நாடகத்தில் டீசல் ஒரு லிட்டர் ரூ.100-ஐ தாண்டி இருக்கிறது.

 அதன்படி, உத்தரகன்னடா மாவட்டத்தில் ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.100.12 காசுகளாகவும், பல்லாரி மற்றும் விஜயநகர் மாவட்டங்களில் ரூ.100.03 காசுகளாகவும் உள்ளது. கர்நாடகத்தில் தற்போது 3 மாவட்டங்களில் டீசல் விலை ரூ.100-ஐ தாண்டி இருக்கிறது. கூடிய விரைவில் பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் டீசல் விலை ரூ.100-ஐ தாண்டுவதற்கு வாய்ப்புள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. உத்தரகாண்ட்: கனமழைக்கு 64 பேர் பலி, 11 பேர் மாயம்; அமித்ஷா பேட்டி
உத்தரகாண்டில் பெய்து வரும் கனமழைக்கு பலி 64 ஆக உயர்ந்து உள்ளது என ஆய்வு மேற்கொண்ட உள்துறை மந்திரி அமித்ஷா கூறியுள்ளார்.
2. சென்னையில் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்வு...
பெட்ரோல், டீசல் விலை தொடர்ச்சியாக அதிகரித்து கொண்டே வருகிறது.
3. உத்தரகாண்ட் கனமழை உயிரிழப்பு; 34 ஆக உயர்வு
உத்தரகாண்டில் பெய்து வரும் கனமழைக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 34 ஆக உயர்ந்து உள்ளது.
4. சென்னையில் கொரோனா பாதிப்பு; இன்று 156 ஆக உயர்வு
சென்னையில் கொரோனா பாதிப்பு நேற்றுடன் ஒப்பிடும்போது, இன்று 156 ஆக உயர்ந்து உள்ளது.
5. "டீசல் விலையை ஓரளவு குறைக்க வேண்டும்" - முதல்-அமைச்சர் மு.கஸ்டாலினுக்கு ஓபிஎஸ் வலியுறுத்தல்
டீசல் விலையை மாநில அரசின் சார்பில் ஓரளவு குறைக்க நடவடிகை எடுக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.கஸ்டாலினுக்கு ஓ.பன்னீர் செல்வம் வலியுறுத்தியுள்ளார்.