மாவட்ட செய்திகள்

கர்நாடகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 25 ஆயிரத்தை தாண்டியது + "||" + corona case increased

கர்நாடகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 25 ஆயிரத்தை தாண்டியது

கர்நாடகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 25 ஆயிரத்தை தாண்டியது
கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பு 25 ஆயிரத்தை தாண்டியுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
பெங்களூரு: கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பு 25 ஆயிரத்தை தாண்டியுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கர்நாடக அரசின் சுகாதாரத்துறை, மாநிலத்தில் நேற்றைய கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து  வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கொரோனா பாதிப்பு

கர்நாடகத்தில் நேற்று 2 லட்சத்து ஒரு ஆயிரத்து 704 பரிசோதனைகள் மேற்கொள்ளப்படன. இதில் 25 ஆயிரத்து 5 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 31 லட்சத்து 24 ஆயிரத்து 524 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு மேலும் 8 பேர் உயிரிழந்தனர். இதனால் வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 38 ஆயிரத்து 397 ஆக அதிகரித்துள்ளது.

ஒரே நாளில் 2,363 பேர் கொரோனாவில் இருந்து குணம் அடைந்தனர். இதனால் கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 29 லட்சத்து 70 ஆயிரத்து 365 ஆக உயர்ந்துள்ளது. மருத்துவ சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 15 ஆயிரத்து 733 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பு விகிதம் 12.39 ஆக அதிகரித்துள்ளது.

பெங்களூருவில் 18,347 பேர்

புதிதாக பாதிக்கப்பட்டவர்களில் பல்லாரியில் 185 பேர், பெலகாவியில் 276 பேர், பெங்களூரு புறநகரில் 390 பேர், பெங்களூரு நகரில் 18,374 பேர், பீதரில் 97 பேர், சாம்ராஜ்நகரில் 176 பேர், சிக்பள்ளாப்பூரில் 119 பேர், சிக்கமகளூருவில் 90 பேர், சித்ரதுர்காவில் 78 பேர், தட்சிண கன்னடாவில் 625 பேர், தாவணகெரேயில் 92 பேர், தார்வாரில் 399 பேர், கதக்கில் 69 பேர், ஹாசனில் 490 பேர், கலபுரகியில் 346 பேர், குடகில் 72 பேர், கோலாரில் 293 பேர், கொப்பலில் 32 பேர், மண்டியாவில் 406 பேர், மைசூருவில் 695 பேர், ராய்ச்சூரில் 122 பேர், ராமநகரில் 112 பேர், சிவமொக்காவில் 212 பேர், துமகூருவில் 547 பேர், உடுப்பியில் 379 பேர், உத்தரகன்னடாவில் 250 பேர், விஜயாப்புராவில் 39 பேர், யாதகிரியில் 16 பேர் உள்ளனர்.

கர்நாடகத்தில் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருபவர்களில் பெங்களூரு நகரில் 3 பேரும், பெலகாவி, கலபுரகி, மைசூரு, துமகூரு, விஜயாப்புராவில் தலா ஒருவரும் என மொத்தம் 8 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
இவ்வாறு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கர்நாடகத்தில் நேற்று முன்தினம் கொரோனா பாதிப்பு 21 ஆயிரத்து 390 ஆக இருந்த நிலையில் அது நேற்று மேலும் அதிகரித்து 25 ஆயிரத்தை தாண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

1. கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பு 34 லட்சத்தை தாண்டியது
கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பு 34 லட்சத்தை தாண்டி உள்ளது. புதிதாக 48 ஆயிரத்து 49 பேருக்கு வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
2. புதிதாக 47 ஆயிரத்து 754 பேருக்கு தொற்று; கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பு கிடுகிடு உயர்வு
கர்நாடகத்தில் புதிதாக 47 ஆயிரத்து 754 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மாநிலத்தில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.
3. கர்நாடகத்தில் ஒரேநாளில் 41,457 பேருக்கு கொரோனா
கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டு உள்ளது. புதிதாக 41 ஆயிரத்து 457 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். சாவு எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது.
4. பெங்களூருவில் அடுக்குமாடி குடியிருப்புகளில் தான் கொரோனா பாதிப்பு அதிகம்
பெங்களூருவில் அடுக்குமாடி குடியிருப்புகளில் தான் கொரோனா பாதிப்பு அதிகம் ஏற்பட்டுள்ளதாக மாநகராட்சி தலைமை கமிஷனர் கவுரவ் குப்தா தெரிவித்துள்ளார்.
5. புதிதாக 1,033 பேருக்கு வைரஸ்: கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரிப்பு
கர்நாடகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்துள்ளது.