பிரதமரின் திட்டத்தின் கீழ் கர்நாடகத்தில் 4.31 கோடி குடும்பங்களுக்கு ரேஷன் பொருட்கள் வினியோகம்


பிரதமரின் திட்டத்தின் கீழ் கர்நாடகத்தில் 4.31 கோடி குடும்பங்களுக்கு ரேஷன் பொருட்கள் வினியோகம்
x
தினத்தந்தி 14 April 2022 10:33 PM GMT (Updated: 14 April 2022 10:33 PM GMT)

பிரதமரின் இலவச உணவு திட்டத்தின் கீழ் கர்நாடகத்தில் 4.31 கோடி குடும்பங்களுக்கு ரேஷன் பொருட்கள் வினியோகம் என ராகவேந்திரா எம்.பி. தெரிவித்துள்ளார்

சிவமொக்கா: சிவமொக்கா மாவட்டம் வினோபா நகர் பகுதியில் உள்ள ஒரு ரேஷன் கடையில் மத்திய அரசின் க்ரீப் கல்யாண் உணவு திட்டத்தின் கீழ் இலவச உணவு பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியின்போது சிவமொக்கா தொகுதி எம்.பி. ராகவேந்திரா தொடங்கி வைத்து பேசியதாவது:-

கர்நாடக மாநிலத்தில் இதுவரை பிரதம மந்திரியின் இலவச உணவு திட்டத்தின் கீழ் 4.31 கோடி குடும்பங்கள் பயனடைந்துள்ளது. அவர்களுக்கு இலவச ரேஷன் பொருட்களை அரசு வழங்கி உள்ளது. இதில் சிவமொக்கா மாவட்டத்தில் 13 லட்சத்து 12 ஆயிரம் குடும்பங்கள் பயன் பெற்றுள்ளனர். கொரோனா காலத்தில் நாட்டில் உள்ள 80 கோடி மக்களுக்கு இந்த திட்டத்தின் கீழ் இலவச ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story