குழந்தைகளை கடத்தினால் 7 ஆண்டு சிறை: குழந்தைகள் பாதுகாப்பு கூட்டமைப்பு வலியுறுத்தல்


குழந்தைகளை கடத்தினால் 7 ஆண்டு சிறை:  குழந்தைகள் பாதுகாப்பு கூட்டமைப்பு வலியுறுத்தல்
x

குழந்தைகளை கடத்தினால் 7 ஆண்டு சிறை தண்டணை வழங்கவேண்டும் என்று குழந்தைகள் பாதுகாப்பு கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

கொள்ளேகால்:

சாம்ராஜ்நகர் மாவட்ட போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் குழந்தைகள் பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் சட்டம்-ஒழுங்கு போலீஸ் அதிகாரிகள், வக்கீல்கள் சங்கத்தை சேர்ந்தவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். அப்போது பேசிய கூட்டமைப்பின் தலைவர் வில்லியம் கிறிஸ்டோபர் கூறியதாவது:-

சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் ஏராளமான குற்றச்செயல்கள் நடைபெறுகிறது. மாநிலத்தில் 2017-ம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டு வரை பல குழந்தைகள் கடத்தப்பட்டுள்ளனர். இந்தியா அளவில் கர்நாடகத்தில் அதிகளவு குழந்தைகள் கடத்தல் நடைபெறுகிறது. இதில் கர்நாடக மாநிலம் 3 இடத்தில் உள்ளது. அதன்படி 1,475 குழந்தைகள் கடத்தல் வழக்கு பதிவாகியிருக்கிறது.

சில நேரங்களில் பெற்றோரை கட்டாயப்படுத்தி குழந்தைகள் தத்து கொடுப்பது என்ற பெயரில் கடத்தப்படுகிறது. இது குறித்து போலீசார் முறையான நடவடிக்கை எடுக்கவேண்டும். 2023-ம் ஆண்டில் இந்த குழந்தை கடத்தல் சம்பவம் அதிகரிக்காமல் பார்த்து கொள்ளவேண்டும். இனி குழந்தைகள் கடத்தல் வழக்கில் யாரேனும் கைது செய்யப்பட்டால் அவர்களுக்கு 7 ஆண்டு சிறை தண்டணை என்று அறிவிக்கவேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story