பொது இடங்களில் முககவசம் அணியாதவர்களுக்கு ரூ.250 அபராதம்; கர்நாடக அரசு முடிவு


பொது இடங்களில் முககவசம் அணியாதவர்களுக்கு ரூ.250 அபராதம்; கர்நாடக அரசு முடிவு
x

பெங்களூரு உள்பட மாநிலத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் பொது இடங்களில் முககவசம் அணியாதவர்களுக்கு ரூ.250 அபராதம் விதிக்க அரசு முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

பெங்களூரு:

கொரோனா அதிகரிப்பு

பெங்களூரு உள்பட மாநிலத்தில் சில நகரங்களில் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. ஒட்டு மொத்தமாக கர்நாடகத்தில் நேற்று முன்தினம் கொரோனா பாதிப்பு ஆயிரத்தை தாண்டி உள்ளது. அதே நேரத்தில் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி சிகிச்சை பெறும் நபர்களின் எண்ணிக்கை 4,682 ஆக உயர்ந்துள்ளது. மும்பைக்கு அடுத்தபடியாக பெங்களூருவில் தான் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

இதையடுத்து, பெங்களூரு உள்பட சில முக்கிய நகரங்களில் நிபுணர் குழுவினரின் அறிவுரைப்படி கொரோனா விதிமுறைகளை அமல்படுத்த வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது. குறிப்பாக பெங்களூரு உள்ளிட்ட முக்கிய நகரங்களில் பொது இடங்களில் முககவசம் அணியாதவர்களுக்கு ரூ.250 அபராதம் விதிக்க வேண்டும் என்று கோரி சுகாதாரத்துறை கூடுதல் முதன்மை செயலாளர் ரன்தீப் கடிதம் எழுதி அனுப்பி வைத்துள்ளார்.

ரூ.250 அபராதம் விதிக்க...

கொரோனா பாதிப்பு அதிகரிப்பு காரணமாக பெங்களூரு மற்றும் முக்கிய நகரங்களில் பொது இடங்களில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ.250 அபராதம் விதிக்க கர்நாடக அரசு ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கொரோனா பாதிப்பு அதிகரிப்பு பற்றி முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, சுகாதாரத்துறை அதிகாரிகள், நிபுணர்கள் குழுவினருடன் ஆலோசனை நடத்த முடிவு செய்திருக்கிறார். எந்த நேரத்திலும் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற வாய்ப்புள்ளது.

இந்த ஆலோசனை கூட்டத்தின் போது பெங்களூருவில் கொரோனா விதிமுறைகளை அமல்படுத்துவது, கர்நாடகத்தில் கொரோனா பரவலை தடுக்க வேண்டிய நடவடிக்கைகள், முககவசம் அணியாதவா்களுக்கு அபராதம் விதிப்பது குறித்து முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை ஆலோசித்து, அறிவிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.


Next Story