வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும்- பொதுமக்களுக்கு, கலெக்டர் வெங்கடராஜா வேண்டுகோள்


வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும்-  பொதுமக்களுக்கு, கலெக்டர் வெங்கடராஜா வேண்டுகோள்
x

அடுத்த சட்டசபை தேர்தலுக்குள் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று பொதுமக்களுக்கு, கலெக்டர் வெங்கடராஜா வேண்டுகோள்விடுத்துள்ளார்.

கோலார் தங்கவயல்:

கோலார் மாவட்ட கலெக்டர் வெங்கடராஜா நேற்று தனது அலுவலகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பொதுவாக எந்த ஒரு தேர்தலாக இருந்தாலும் சட்டவிரோதமாக சிலர் போலி வாக்காளர் அடையாள அட்டையை பயன்படுத்துவதாகவும், போலி வாக்காளர் பட்டியலை தயாரிப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுகின்றன. தேர்தல் முடிந்த பின்னர் போலி வாக்காளர் அடையாள அட்டையை சமூக ஆர்வலர்கள் கொண்டு வந்து காண்பித்து புகார் செய்கிறார்கள். இதனால், தேர்தலுக்கு பின் இதுபோன்ற புகார்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க முடியாத நிலை ஏற்படுகிறது.

இது போன்ற முறைகேடுகளை தடுக்க வாக்காளர்கள் தங்களின் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டியது மிகவும் அவசியம். போலி வாக்காளர்களை ஒழிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் முயற்சியில் அனைவரின் ஒத்துழைப்பும் அவசியம். அடுத்த ஆண்டு நடக்க உள்ள சட்டசபை தேர்தலுக்கு முன் அனைத்து வாக்காளர்களும் தங்களின் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைத்துக்கொண்டு போலி வாக்காளர் முறையை ஒழிக்க ஒத்துழைப்பு அளிக்கவேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story