சேவைகளில் குறைபாடு ஏற்பட்டதாக புகார்: மழையால் பாதித்த மக்கள் தங்கியிருக்கும் முகாமில் கலெக்டர் ஆய்வு


சேவைகளில் குறைபாடு ஏற்பட்டதாக புகார்:  மழையால் பாதித்த மக்கள் தங்கியிருக்கும் முகாமில் கலெக்டர் ஆய்வு
x

குடகில், மழையால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்கியிருக்கும் முகாமில் மாவட்ட கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர்களிடம் குறைகளையும் கேட்டறிந்தார்.

குடகு:

நிலச்சரிவு

தென்மேற்கு பருவமழையால் குடகு மாவட்டம் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது. குறிப்பாக மடிகேரி பகுதியில் நிலச்சரிவு காரணமாக 35 குடும்பத்தினர் வீடுகளை இழந்தனர். அந்த 35 குடும்பத்தைச் சேர்ந்த 88 பேர் மடிகேரியில் உள்ள அரசு கல்லூரி வளாகத்தில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு அரசு சார்பில் உணவு, மருந்துகள் மற்றும் இதர பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் அவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் சேவையில் குறைபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதுபற்றி அறிந்த மாவட்ட கலெக்டர் சதீஷ், நேற்றுமுன்தினம் காலையில் அந்த முகாமுக்கு சென்று அங்கு தங்கியிருக்கும் மக்களை நேரில் சந்தித்து குறைகளை கேட்டறிந்தார்.

மருத்துவ முகாம்

அப்போது அவர்களுக்கு வழங்கப்படும் உணவு, இதர சேவைகள், குழந்தைகளுக்கு வழங்கப்படும் பால், பிஸ்கட், முட்டை உள்ளிட்டவை குறித்தும் கேட்டறிந்தார். இந்த சந்தர்ப்பத்தில் அங்கு தங்கியிருந்தவர்கள் தங்களுக்கு அரசு சார்பில் நிரந்தரமாக தங்க ஒரு இடம் தருமாறும், தங்களின் உடல் ஆரோக்கியத்துக்காக மருத்துவ முகாம் நடத்துமாறும் கேட்டுக் கொண்டனர். அவர்களின் கோரிக்கையை ஏற்ற கலெக்டர் விரைவில் மருத்துவ முகாம் நடத்துவதாக உறுதி அளித்தார். அதையடுத்து அவர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.


Next Story