கொத்தடிமை தனத்தை ஒழித்தவர் தேவராஜ் அரஸ்-மந்திரி நாராயணகவுடா பேச்சு


கொத்தடிமை தனத்தை ஒழித்தவர் தேவராஜ் அரஸ்-மந்திரி நாராயணகவுடா பேச்சு
x

கொத்தடிமை தனத்தை ஒழித்தவர் தேவராஜ் அர்ஸ் என்று மந்திரி நாராயணகவுடா தெரிவித்துள்ளார்.

மண்டியா:

தேவராஜ் அர்ஸ் பிறந்தநாள் விழா

மண்டியா மாவட்டத்தில் உள்ள பி.ஆர். அம்பேத்கர் பவனில் முன்னாள் முதல்-மந்திரி தேவராஜ் அர்சின் 107-வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் கலந்து கொண்ட பேசிய விளையாட்டு துறை மந்திரி நாராயணகவுடா கூறியதாவது:- சமூகப்புரட்சிக்கு முன்னோடியாக திகழ்பவர் தேவராஜ் அர்ஸ். தனது ஆட்சி காலத்தில் கொத்தடிமை தனத்திற்கு தடை விதித்தார். நிலசீர்திருத்த சட்டம் கொண்டு வந்தார். அன்பு, சமத்துவத்தை முன்வைத்து பல முற்போக்கு திட்டங்களை வகுத்து கொடுத்தார். பிற்படுத்தப்பட்டவர்கள் நலனுக்காக மிகவும் பாடுபட்டார். அடித்தட்டு மக்களுக்கு அனைத்து வசதிகளும் கிடைக்கவேண்டும் என்று நினைத்தனர். முற்போக்கு சிந்தனை வாதியான அவரது 107-வது பிறந்த நாள் விழாவை கொண்டாடுவதில் மிகவும் மகிழ்ச்சி அடைக்கிறேன். அவரை போன்று அனைவரும் மக்கள் பணியாற்றவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

சமுதாய பவன் கட்ட நிதி ஒதுக்கீடு

இதில் கலந்துகொண்டு பிரித்தம் கவுடா எம்.எல்.ஏ. பேசியதாவது:- தனது ஆட்சி காலத்தில் விவசாயம் செய்பவர்களின் நிலத்தை அவர்களுக்கே சொந்தமாக கொடுத்த பெருமை தேவராஜ் அர்சை சேரும். இதனால் பிற்படுத்தப்பட்டவர்கள் மற்றும் பிற

சமூகத்தினர் நிலம் உரிமையாளர்களாக ஆகினர். அவரது நிலச் சீர்திருத்தச்சட்டம் ஒரு புரட்சிகரமான திட்டம். அறிவியல் மற்றும் தொழில்நூட்பத்தில் மாணவர்களின் கல்விக்கு முன்னுரிமை கொடுத்தார். ஏழை குழந்தைகளின் கல்விக்காக விடுதி மற்றும் இடம் ஒதுக்கீடு வழங்கினார். ஹாசனில் பிற்படுத்தபட்டவர்கள் அனைவரும் சேர்ந்து சமுதாய பவன் கட்டுவதற்கு முன் வந்துள்ளனர். இதற்காக கிருஷ்ணாநகர் பகுதியில் நிலம் வழங்க மாநில அரசு முன் வந்துள்ளது. மேலும் கட்டிட பணிக்காக ரூ.50 லட்சம் நிதியும் வழங்கப்பட்டுள்ளது. இதை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story