புதிய ஜனாதிபதி பதவி ஏற்பு: திரவுபதி முர்முவுக்கு கவர்னர், முதல்-மந்திரி வாழ்த்து


புதிய ஜனாதிபதி பதவி ஏற்பு:  திரவுபதி முர்முவுக்கு கவர்னர், முதல்-மந்திரி வாழ்த்து
x

புதிய ஜனாதிபதியாக பொறுப்பேற்றுள்ள திரவுபதி முர்முவுக்கு கவர்னர் தாவர்சந்த் கெலாட், முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

பெங்களூரு:

ஜனநாயகத்தில் பொன்னாள்

நாட்டின் புதிய ஜனாதிபதியாக திரவுபதி முர்மு நேற்று பதவி ஏற்றார். இதையொட்டி அவருக்கு கர்நாடக அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளார். கவர்னர் தாவர்சந்த் கெலாட் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், "புதிய ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு எனது இதய பூர்வமான வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். அவரது அனுபவம், வழியாட்டுதலில் உலகில் இந்தியா புதிய உச்சத்தை தொடும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது" என்று குறிப்பிட்டுள்ளார்.

முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தனது டுவிட்டரில், "புதிய ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு எனது வாழ்த்துக்கள். இந்திய ஜனநாயக வரலாற்றில் இன்று (நேற்று) ஒரு பொன்னான நாள். அவர் வளர்ந்து வந்த வரலாறு நாட்டில் உள்ள ஒவ்வொருவரையும் ஈர்க்கும். ஒரு பெண் ஏழை பழங்குடியின குடும்பத்தில் பிறந்து ராஷ்டிரபதி பவனுக்கு வந்துள்ளார்" என்று தெரிவித்துள்ளார்.

தேவேகவுடா

முன்னாள் பிரதமர் தேவேகவுடா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், "திரவுபதி முர்மு புதிய ஜனாதிபதியாக தேர்ந்து எடுக்கப்பட்டு இருப்பதன் மூலம் குடியரசாக நாம் ஒவ்வொருவரும் பெருமை கொள்ள வேண்டும். அவர் ஜனாதிபதியாக பொறுப்பு ஏற்றதற்கு எனது வாழ்த்துகளை தெரிவிக்கிறேன்" என்று கூறியுள்ளார். கர்நாடகத்தை சேர்ந்த மந்திரிகள், பா.ஜனதா தலைவர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் என பல்வேறு தரப்பினரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.


Next Story