ரூ.75 லட்சம் கையாடல்; போவி மேம்பாட்டு ஆணைய பொது மேலாளர் கைது


ரூ.75 லட்சம் கையாடல்; போவி மேம்பாட்டு ஆணைய பொது மேலாளர் கைது
x

ரூ.75 லட்சம் கையாடல் செய்த போவி மேம்பாட்டு ஆணைய பொது மேலாளர் கைது செய்யப்பட்டார்.

பெங்களூரு:

கர்நாடகத்தில் போவி சமூகத்திற்காக மேம்பாட்டு ஆணையம் செயல்பட்டு வருகிறது. ஆணையத்தின் நிர்வாக இயக்குனராக லீலாவதி செயல்பட்டு வந்தார். இந்த நிலையில் போவி மேம்பாட்டு ஆணைய நிதியை லீலாவதி கையாடல் செய்ததாக புகார் எழுந்தது. இதனால் கடந்த ஏப்ரல் மாதம் அவருக்கு சொந்தமான இடங்களில் ஊழல் தடுப்பு படையினர் சோதனை நடத்தினர். அப்போது அவர், போவி மேம்பாட்டு ஆணையத்தின் நிதியை கையாடல் செய்தது தெரியவந்தது.

இதையடுத்து ஊழல் தடுப்பு படையினர் அவரை கைது செய்தனர்.இந்த நிலையில் போவி மேம்பாட்டு ஆணையத்தின் பொது மேலாளரான நாகராஜப்பா என்பவர் போலியாக 15 வங்கி கணக்குகள் தொடங்கி அதில் தலா ரூ.5 லட்சம் கடன் வழங்கி உள்ளார். பின்னர் அந்த பணத்தை முறைகேடாக பயன்படுத்தி வந்துள்ளார். இந்த நிலையில் மகாலட்சுமி லே-அவுட், விஜயாநகர் பகுதிகளில் உள்ள அவருக்கு சொந்தமான இடங்களில் ஊழல் தடுப்பு படையினர் சோதனை நடத்தினர். இதையடுத்த நாகராஜப்பாவை ஊழல் தடுப்பு படையினர் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.செய்த


Next Story