ஈத்கா மைதானத்தை சுத்தப்படுத்திய மாநகராட்சி தூய்மை தொழிலாளர்கள்


ஈத்கா மைதானத்தை சுத்தப்படுத்திய மாநகராட்சி  தூய்மை தொழிலாளர்கள்
x

பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படாது என கூறப்பட்ட நிலையில் ஈத்கா மைதானத்தை மாநகராட்சி தூய்மை தொழிலாளர்கள் தூய்மைபடுத்தினர்

பெங்களூரு:

பெங்களூரு சாம்ராஜ்பேட்டையில் உள்ள ஈத்கா மைதான விவகாரம் மாநகராட்சிக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தி உள்ளது. அந்த மைதானம் தங்களுக்கு சொந்தமானது என்று கூறி வக்பு போர்டு மாநகராட்சியிடம் ஆவணங்களை தாக்கல் செய்துள்ளது. இதனால் மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் ஈத்கா மைதானம் இல்லை என்று தலைமை கமிஷனர் துஷார் கிரிநாத் அறிவித்திருந்தார். பின்னர் வருவாய்த்துறையின் கட்டுப்பாட்டில் ஈத்கா மைதானம் இருப்பதாக துஷார் கிரிநாத் தெரிவித்தார். அதே நேரத்தில் ஈத்கா மைதான விவகாரம் தொடர்பாக வருகிற 12-ந் தேதி போராட்டத்திற்கு சிலர் அழைப்பு விடுத்திருந்தனர். இதற்கிடையில், ஈத்கா மைதானம் மாநகராட்சியின் கட்டுப்பாட்டின் கீழ் இல்லாததால், அங்கு பராமரிப்பு, சுத்தம் செய்தல் உள்ளிட்ட எந்த பணிகளையும் மாநகராட்சி மேற்கொள்ளாது என்று துஷார் கிரிநாத் அறிவித்திருந்தார்.

இந்த நிலையில், காலையில் ஈத்கா மைதானத்தை சுத்தம் செய்யும் பணியில் மாநகராட்சியின் துப்புரவு தொழிலாளர்கள் ஈடுபட்டனர். இன்று பக்ரீத்தையொட்டி அங்கு கூட்டு பிரார்த்தனை நடைபெறுவதால், சுத்தம் செய்யும் பணியில் தொழிலாளா்கள் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் மாநகராட்சி அதிகாரிகளின் உத்தரவின் பேரில் தான் மைதானத்தை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டதாக துப்புரவு தொழிலாளா்கள் தெரிவித்தனர். இதனால் மாநகராட்சி தலைமை கமிஷனர் துஷார் கிரிநாத் ஏதாவது பேசி சர்ச்சையில் சிக்கி வருகிறாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.


Next Story