எதிர்க்கட்சிகளின் ஜனாதிபதி வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா பெங்களூரு வருகை


எதிர்க்கட்சிகளின் ஜனாதிபதி வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா பெங்களூரு வருகை
x

எதிர்க்கட்சிகளின் ஜனாதிபதி வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா இன்று பெங்களூருவுக்கு வந்தார்.

பெங்களூரு:

ஜனாதிபதி தேர்தல்

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் வருகிற 24-ந் தேதியுடன் முடிகிறது. புதிய ஜனாதிபதிக்கான தேர்தல் வருகிற 18-ந் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த தேர்தலில் ஆளும் பா.ஜனதா சார்பில் ஜார்கண்ட் மாநில முன்னாள் கவர்னரும், ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவருமான திரவுபதி முர்முவும், எதிர்க்கட்சிகளின் சார்பில் முன்னாள் மத்திய மந்திரி யஷ்வந்த் சின்ஹாவும் போட்டியிடுகிறார்கள். அவர்கள் 2 பேரும் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து மக்கள் பிரதிநிதிகளை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார்கள்.

பெங்களூரு வருகை

இந்த நிலையில் எதிர்க்கட்சி சார்பில் போட்டியிடும் யஷ்வந்த் சின்ஹா, காலையில் தெலுங்கானாவுக்கு சென்று அந்த மாநில மக்கள் பிரதிநிதிகளை சந்தித்து ஆதரவு திரட்டினார். இதையடுத்து அவர் தெலுங்கானாவில் இருந்து சிறப்பு விமானம் மூலம் பெங்களூருவுக்கு வந்தார்.அவர் நாளை கர்நாடக காங்கிரஸ் மற்றும் ஜனதாதளம்(எஸ்) கட்சிகளை சேர்ந்த மக்கள் பிரதிநிதிகளிடம் ஆதரவு கேட்க உள்ளார். நாளை சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் எம்.பி., எம்.எல்.ஏ.க்களை சந்தித்து தனக்கு ஆதரவு கேட்க உள்ளார். பின்னர் மாலை 4 மணிக்கு அவர் டெல்லி புறப்பட்டு செல்கிறார்.


Next Story